நிலக்கோட்டை
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை பூமார்கெட்டில் தினமும் திண்டுக்கல் மதுரை,தேனி மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள் தங்கள் வயலில் உற்பத்தி செய்யப்படும் பூக்களை நேரடியாக விற்பனை செய்து வருகின்றனர்,
இதனால் கேரளா,ஆந்திராகர்நாடகா சென்னை பாண்டிச்சேரி மற்றும் மலேசியா சிங்கப்பூர் கனடா உள்ளிட்ட பகுதிகளுக்கு தினமும் 10-டன் முதல் 15-டன் வரை ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது,
அதே போல இம்மார்கெட்டில் திருவிழா திருமணம் காதணிவிழா உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கும் பல்வேறு மாடல்களில் விதவிதமான மாலைகள் கட்டிவிற்பனை செய்வது வழக்கம்
இந்நிலையில் நாகர்கோவில் அருகே உள்ள கீழவண்ணான்வினை என்ற கிராமத்தில் பிரசித்தி பெற்ற அருள்மிகு வன்னியடி மரச்சாமி கோவில் ஆவணி மாதம் கொடைத் திருவிழாவை
முன்னிட்டு
அதன் பரிவார தெய்வங்களான பிரம்மசக்தி அம்மன் சுடலை மாடசாமி இசக்கி அம்மன் ஆகிய தெய்வங்களுக்கும் சேர்த்து பச்சை ஏலக்காய் உள்ளிட்ட பதப்படுத்தப்பட்ட உலர் கருப்பு திராட்சை முந்திரி பாதாம் பிஸ்த்தா மற்றும் அலங்கார பொருட்கள் மூலம் 10-நாட்களாக மாலை தயாரிப்பு வல்லுனர்களான மல்லையாபுரம் முருகன் முத்துக்குமார் ஆகியோர் தலைமையில் சுமார் 120-பணியாளர்கள் விரதமிருந்து ரூபாய் 4 லட்சம் மதிப்பில் 8 அடி உயரத்தில் 2-மாலைகளும் 5-அடி உயரத்தில் ஒரு மாலையும் என மூன்று இராட்சத பிரம்மாண்ட மலைகள் தயார் செய்துள்ளனர்,
இம்மாலைகள் நேற்று லாரிகள் மூலம் கொண்டு செல்லப்பட்டது இன்று நடைபெறும் கொடை திருவிழாவில் ஐயன் சுடலைமாடன் எனப்படும் வன்னியடி மரச்சாமிக்கு சாத்தப்படுகிறது,
என்று தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் இது குறித்து மாலை தயாரிப்பு வல்லுனர்கள் முருகன் மற்றும் முத்துக்குமார் ஆகியோர் கூறியதாவது நாகர்கோவில் சரக்கல்வினை அருள்மிகு பிரம்மசக்தி அம்மனும் சுடலைமாட சுவாமியுடன் இசக்கி அம்மனும் கூடிய வன்னியடி மரச்சுவாமி திருக்கோவிலுக்கு பக்தர்கள் வித்தியாசமான மாலை செய்ய வேண்டி கீழவண்ணான் விளை என்ற கிராமத்தில் குலசாமிக்கு படைப்பதற்காக சத்தியசீலன், சத்தியரூபன் ஆகிய 2 -பக்தர்கள் இது போன்ற மாலை வேண்டுமென்று ஆர்டர் கொடுத்தார்கள். அதன் பேரில் சுமார் 4 லட்சம் ரூபாய் மதிப்பில் கடந்த 10 நாட்களாக 120 பணியாளர்கள் கொண்ட குழு விரதமிருந்து இந்த மாலையை தயார் செய்துள்ளோம் இது போன்று பல்வேறு வகையில் சிறப்பாக செய்து தர முன்பதிவு செய்தால் செய்து தருவோம் என தெரிவித்தார்.
மேலும்
நிலக்கோட்டை பூ மார்க்கெட்டில் இவ்வளவு பெரிய பிரம்மாண்டமான மாலையை பார்த்து விவசாயிகளும் பொதுமக்களும் ஆச்சர்யத்தோடு பார்த்து சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.