இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான ஒரு லட்சத்து 69 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் அளவீடு செய்யபட்டு 6,775 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் மீட்க பட்டுள்ளது என இந்து சமய அறநிலையத் துறையின் அமைச்சர் சேகர் பாபு செய்தியாளர்களிடம் பேசுகையில் தெரிவித்தார். கிருஷ்ணகிரி மாவட்டம் எருமாம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட பெருமாள் கோயில் மற்றும் பட்டாளம்மன் கோவிலுக்கு சொந்தமான நிலங்களில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான கிரானைட் கற்கள் வெட்டி எடுக்கபட்டதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதன் அடிப்படையில் விசாரணை நடைபெற்று வரும் நிலையில், இந்து சமய அறநிலையத் துறையின் அமைச்சர் சேகர்பாபு சம்பவ இடத்துக்கு நேரில் வந்து ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் கடந்த மூன்று ஆண்டுகளில் கோவில் சொத்துக்கள் படிப்படியாக மீட்டக்கப்பட்டு வருவதாகவும், 38 மாவட்டங்களில், 38 தனி வட்டாட்சியர்கள் நியமிக்க பட்டு 10 கோடியே 50 லட்சம் ரூபாய் செலவில் அளவீடு செய்யபட்டு HRCE கற்கள் பாதிக்கபட்டு வருகிறது என்றார். மேலும் இதுவரை 1 லட்சத்து 69 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் அளவீடு செய்யபட்டு, 18 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பெயர் மாற்றம் செய்யப்பட்டடு, 16 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் கையகப் படுத்த பட்டுள்ளது என்றும் கூறினார். கோவிலுக்கு சொந்தமான நிலங்களில் யார் தவறுகள் செய்தாலும் சட்டபடி தண்டிக்க படும்.. இந்த கோவிலுக்கு சொந்தமான நிலத்தில் கிரானைட் கற்கள் வெட்டி எடுக்க பட்டது குறித்து நீதிமன்றத்தில் வழக்கு உள்ளதால் இது குறித்து விசாரணை அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யபடும். இதில் எந்த அதிகாரிகள் தவறு செய்திருந்தாலும் நிச்சயம் நடவடிக்கை எடுக்கபடும் என்று கூறினார். இந்த ஆய்வின் போது மாவட்ட ஆட்சியர் திருமதி சரயு, காவல் கண்காணிப்பாளர் தங்கதுரை, இந்து சமய அறநிலையத் துறையின் இணை ஆணையாளர் சுதர்சன், பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் தே.மதியழகன், ஒன்றிய கழக செயலாளர் ஆதி மகேந்திரன் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.
இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு

Leave a comment
Weekly Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
- Advertisement -



Global Coronavirus Cases
Confirmed
0
Death
0
More Information:Covid-19 Statistics