தருமபுரி மாவட்ட நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர்கள் சங்கம் சார்பில் கலெக்டர் அலுவலகம் எதிரே உள்ள நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் அலுவலகம் முன்பு கோரிக்கை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாநிலச் செயலாளர் வடிவேல் தலைமை வகித்தார். பெரியசாமி முன்னிலை வகித்தார். தமிழ்நாடு அரசு பணியாளர் சங்க சிறப்பு தலைவர் பால்பாண்டியன் ஐக்கிய தொழிற்சங்க காங்கிரஸ் மாநில குழு உறுப்பினர் புகழேந்தி,அறிவாளி, ராமமூர்த்தி உள்ளிட்டோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்கள். இதில் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். நெடுஞ்சாலைத் துறையில் காலியாக உள்ள பணியிடங்ளில் சாலை பணியாளராக கிராமப்புற இளைஞர்களை பணி நியமன செய்ய வேண்டும். 41 மாதம் பணியிட காலத்தை பணிக்காலமாக ஓய்வூதியத்தில் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்.என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இதில் சங்கத்தின்பணியாளர்கள் திரளாக பங்கேற்றனர்.



