ஆரிக்கம்பேடு, அரசு உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்ற
முப்பெரும் விழா
திருவள்ளூர் மாவட்டம், சென்னை, அம்பத்தூரை அடுத்த ஆரிக்கம்பேடு, அரசு உயர் நிலைப் பள்ளியில் பள்ளி ஆண்டு விழா, புரவலர் திட்ட முதலாம் ஆண்டு பரிசளிப்பு விழா, எஸ்.இராணியம்மாள் நினைவு அறக்கட்டளை இரண்டாம் ஆண்டு பரிசளிப்பு விழா ஆகிய முப்பெரும் விழாவாக நடைபெற்றது.
விழாவில் அரசுப் பள்ளி வறுமையின் அடையாளம் அல்ல பெருமையின் அடையாளம். என்பதை ஏற்படுத்தும் விதமாகவும் தனியார் பள்ளிக்கு நிகராக உயர, நமது பணி அமைய வேண்டும்
மேலும் மாணவர்களின் வெற்றிக்கு நல்வழி காட்டியாக வருபவரும் பள்ளியின் தலைமை ஆசிரியருமான ஆர்.ஜெயராமன் வரவேற்புரை வழங்க நடைபெற்ற இந்த விழாவின் முதலாவது நிகழ்வாக, பள்ளியின் ஆண்டு விழா நடைபெற்றது.
இவ்விழாவிற்கு, ஆவடி மாநகராட்சி ஆணையர் ச.கந்தசாமி மற்றும் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் அ.பிரபாகரன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக வருகை தந்தனர்.
இதனைத் தொடர்ந்து மாநகராட்சி ஆணையர் மாணவர்களுடைய கலை நிகழ்ச்சிகளை கண்டு களித்து மாணவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக குட்டி கதை சொல்லி விழாப் பேருரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில்.
புரவலர் திட்டத்திற்காக நிதி சேகரித்ததில் ஆரிக்கம்பேடு அரசுப் பள்ளி தமிழக அளவில் இரண்டாம் இடத்தில் இருப்பது உண்மையிலேயே பாராட்டுக்கு உரியது” என்றார். மேலும் நமது முன்னோர்கள் கல்வியில் எப்படி சிறந்து வழங்கினார்கள் என்பதை திருக்குறளின் சிறப்பைக்கூறி எடுத்துரைத்தார். அடுத்ததாக, மாணவர்கள் மொபைல் போனுக்கு அடிமையாவதை தவிர்க்க வேண்டும் என்பதை வலியுறுத்திய அவர், நூல்களை படிப்பதனால் வாழ்க்கையில் உண்டாகும் மாற்றங்கள் குறித்து பேசினார்.அதன் பின்னர் ஆரிக்கம்பேடு அரசு பள்ளிக்கு, பேரறிஞர் அண்ணா எழுதிய “மாபெரும் தமிழ் கனவு” என்ற நூலையும் “மகளாற்றுப்படை” என்ற நூலையும், இந்திய அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கி 75 ஆண்டுகள் நிறைவு பெறுவதை தொடர்ந்து ஹரியானா மாநிலம் வெளியிட்டுள்ள சிறப்பு காலண்டரையும் பரிசாக வழங்கினார்.
பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் அ.பிரபாகரன் பேசுகையில்…
“இந்த ஆண்டு பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 500/500 மதிப்பெண் பெறும் மாணவர்கள் அனைவரையும், அவர்களுக்கு பாடம் கற்றுக் கொடுத்த ஆசிரியர்களையும் தனது சொந்த செலவில் விமானம் மூலம் தாஜ்மகால் அழைத்து சென்று வருவதாக” கூறினார்.
புரவலர் திட்டம் தொடங்கப்பட்டு ஓராண்டு முடிவடைந்த நிலையில், அந்த நிதியில் இருந்து கிடைத்த வருவாயில் இருந்து, தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களுக்கு ரூ.80,000 மதிப்பிலான பரிசு பொருள்கள் வழங்கக்கூடிய நிகழ்ச்சி இரண்டாவது நிகழ்வாக நடைபெற்றது.
எஸ்.ராணி அம்மாள் நினைவு அறக்கட்டளை சார்பாக பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ், மெடல், ரொக்க பரிசு போன்றவை ஐம்பதாயிரம் ரூபாய் மதிப்பில், அறக்கட்டளை நிறுவனர் சுந்தர் அவர்களால் வழங்கப்படக்கூடிய பரிசு பொருள்கள் வழங்குதல் நிகழ்ச்சி மூன்றாவது நிகழ்வாக நடைபெற்றது. இந்த விழாவில், தொழிலதிபர்கள் நடராஜன், கனி, பக்தவச்சலம், ரமேஷ், பாலு, மனோகரன், ஹைடெக் மனோகரன், சரவணன், முருகன், வாசு போன்றோர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர். கணித ஆசிரியர் ஜெய்சங்கர் மற்றும் ஆசிரியர்கள் ஸ்ரீவித்யா, நாகலதா ஆகியோர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்கள்.
நிகழ்ச்சியின் இடை இடையே மாணவ-மாணவியர் நிகழ்த்திய கலை நிகழ்ச்சிகளும் இடம் பெற்றன.
இவ்விழாவில், SMC கல்வியாளர் அறவாழி, பள்ளி மேலாண்மை குழுத் தலைவி மகாலட்சுமி மற்றும் சிவக்குமார், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், பெற்றோர்கள் அனைவரும் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.