மதுரை மார்ச் 5,
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் ஊராட்சி ஒன்றியம், சின்ன இலந்தைகுளம் கிராமத்தில் தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறையின் மூலம் முதலமைச்சர் சிறு விளையாட்டு அரங்கத்தை காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். அதனை தொடர்ந்து வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி குத்துவிளக்கேற்றி வைத்து பார்வையிட்டார். மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சௌ.சங்கீதா சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் ஆ.வெங்கடேசன் ஆகியோர் உடன் உள்ளனர்.