கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த ரெட்டிபட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 1 -ம் வகுப்பு முதல் 8- ம் வகுப்பு வரை 50 மாணவர்கள் 48 மாணவிகள் என மோத்தம் 98 பேர் பயின்று வருகின்றனர்.
நேற்று மாலை நான்கு மணி அளவில் ஆறாம் வகுப்பு மாணவிகளை விளையாட அனுமதித்ததால் பள்ளி வளாகத்தில் விளையாடிக் கொண்டிருந்த அதே பகுதியை சேர்ந்த திருப்பதி என்பவரின் மகள் இந்துமதி (11) வாந்தி எடுத்தவாறு மயங்கி விழுந்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
அதன் பின்னர் போலீஸ்சாருக்கு தகவல் தெரிவித்ததை அடுத்து உடலை கைப்பற்றி ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.
இது குறித்து ஊத்தங்கரை காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பள்ளி வளாகத்தில் பள்ளி மாணவி மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.