திருப்பத்தூர்:ஜூன்:05, திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த கொரட்டி பாம்புகாரன் வட்டம் பகுதியைச் சேர்ந்த கணபதி இவர் பீகாரில் ராணுவத்தில் நாயக் என்ற பொறுப்பில் 14 வருடங்களாக பணியாற்றி வருகிறார்
இவருக்கு எட்டு வருடங்களுக்கு முன்பு வினோதினி என்ற பெண்ணுடன் திருமணமாகி நான்கு வயதில் கிஷோர் என்ற மகன் உள்ளனர்.
அதே பகுதியை சேர்ந்த சதீஷ்குமார் மனைவி சத்தியா வயது 28 என்பவருடன் கள்ள தொடர்பில் இருந்து வந்ததாக தெரிகிறது.
இந்த நிலையில் இரண்டு மாத விடுமுறையில் கணபதி கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு சொந்த ஊர் திரும்பியுள்ளார்.
அப்போது கணபதிக்கும் அவருடைய மனைவியான வினோதினிக்கும் இடையே நான்கு நாட்களாக வாய் தகறாரு இருந்து வந்திருந்தது.
இதற்கு சத்யா தான் காரணம் என வினோதினியும் அவருடைய தாயாரும் இருவரும் சேர்ந்து சத்யாவை நேற்று இரவு சரா மாறியாக தாக்கியுள்ளனர்.
இந்தச் சம்பவம் அறிந்த கணபதிக்கும் அவருடைய மனைவிக்கும் இடையே இன்று காலை திரும்பவும் அதே போல் தகராறு ஏற்பட ஆத்திரமடைந்த வினோதினி தனது மகன் கிஷோரை தூக்கிக்கொண்டு அருகே உள்ள கிணற்றில் குதித்துள்ளார்.
இதனை அறிந்த அக்கம்பக்கத்தினர் திருப்பத்தூர் தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவித்தனர் பின்னர் விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் சில மணி நேரம் நேரம் போராடி வினோதினியை பத்திரமாக மீட்டனர்.
அதற்குள் நான்கு வயது சிறுவன் கிஷோர் நீரில் மூழ்கி உயிரிழந்தான். பின்னர் உடலை மீட்டு திருப்பத்தூர் கிராமிய காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர் போலீசார் பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு உடலை அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் அறிந்த சத்யாவும் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்று உள்ளார் அவரை மீட்டு குடும்பத்தினர் திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சத்தியா சிகிச்சை பெற்று வருகிறார்.
மேலும் இந்த சம்பவம் குறித்து திருப்பத்தூர் கிராமிய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
குடும்ப தகராறு காரணமாக ஏற்பட்ட பிரச்சனையில் குழந்தையுடன் தாய் கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்று குழந்தை உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் ஆழ்ந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.