திருப்பத்தூர்:டிச:04, திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த தாதவள்ளி சின்ன சமுத்திரம் கிராமத்தை சேர்ந்த பழனி என்பவருடைய மகன் குமாரன் ( வயது 17) என்பவர் 2.12.2024 அன்று பிற்பகல் சுமார் 12:30 மணிக்கு புயலின் காரணமாக அறுந்து விழுந்த மின் கம்பியை தவறுதலாக மிதித்து விட்டதால் மின்சாரம் தாக்கி இறந்து விட்டார். இறந்தவரின் குடும்பத்திற்கு பேரிடர் நிவாரண நிதியிலிருந்து ரூ.4 லட்சம் ரூபாய் வங்கி கணக்கிற்கு இணைய வழி மூலம் 24 மணி நேரத்திற்குள்ளாக அனுப்பப்பட்டதற்கான உத்தரவு நகலினை மாவட்ட ஆட்சித் தலைவர் தர்ப்பகராஜ் இ.ஆ.ப, திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் அ.நல்லதம்பி ஆகியோர் இறந்தவரின் குடும்பத்தினரிடம் வழங்கினார்கள். உடன் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் உள்ளனர்.



