தென்காசி மாவட்டம் பள்ளி கல்வித்துறை அரசு தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கு கையடக்க கணினி வழங்கும் விழா தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி ராணி ஸ்ரீகுமார் தென்காசி சட்டமன்ற உறுப்பினர் எஸ். பழனி நாடார் , சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ராஜா , மாவட்ட ஆட்சித் தலைவர் கமல் கிஷோர், ஆகியோர் முன்னிலையில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.இராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது.
முன்னதாக மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் ரூ.80 இலட்சம் மதிப்பீட்டில் முடிவுற்ற சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சகி ஒருங்கிணைந்த சேவை மைய கட்டடத்தினை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.இராமச்சந்திரன் திறந்து வைத்தார்.
பின்னர் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் பேசியதாவது,
தமிழ்நாடு முதல்மைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணைக்கிணங்க தென்காசி மாவட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் 10 வட்டாரங்கள் மற்றும் 374 பள்ளிகளில் பணிபுரியும் 977 தொடக்கக் கல்வி ஆசிரியர்களுக்கு ரூ.124.37 இலட்சம் மதிப்பிலான கையடக்க கணினிகளும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 42 பயனாளிகளுக்கு ரூ.39.90 இலட்சம் மதிப்பிலான இணைப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்கள் மற்றும் 32 பயனாளிகளுக்கு ரூ. 4.37 இலட்சம் மதிப்பிலான மோட்டார் பொருத்தப்பட்ட தையல் இயந்திரங்களும், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் சார்பில் முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 11 பயனாளிகளுக்கு ரூ. 50 ஆயிரத்திற்கான வைப்புத்தொகை ரசீது வழங்குதல் மற்றும் பெண் குழந்தைகளை காப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டத்தின் கீழ் 12 பெண் குழந்தைகளின் பெற்றோர்களுக்குரூ.20,000/- மதிப்பிலான பாராட்டு சான்றிதழ் ஊட்டச்சத்து பெட்டகம் மற்றும் குழந்தைகளுக்கு ஆடைகளும், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் சார்பில் ஊரகப் பகுதிகளில் ரூ. 330.40 இலட்சம் மதிப்பீட்டில் முடிவுற்ற 18 அரசு கட்டிடங்கள் என மொத்தம் ரூ. 500.74 இலட்சம் மதிப்பிலாக நலத்திட்ட உதவிகள் மற்றும் முடிவுற்ற திட்டப்பணிகள் துவக்கி வைக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் சார்பில் 2023 -24 ஆம் ஆண்டு மாநில நிதியின் கீழ் உள்நாட்டு மீனவர்களின் மீன் திறனை மேம்படுத்திட ரூ.20,000/- மதிப்புள்ள மீன் பிடி உபகரணங்கள் 50% மானியத்தில் 3 பயனாளிகளுக்கும், தோட்டக்கலைத் துறையின் சார்பில் 2 பயனாளிகளுக்கு தென்னை, வெங்காய சேமிப்புக் கிடங்கு வைப்பதற்காக ரூ.1,11,000/- ரூபாய் மானியத் தொகையும் வழங்கப்பட்டுள்ளது.
தென்காசி மாவட்டம் கடையம் ஊராட்சி ஒன்றியம் அனந்த பெருமாள் நாடானூர் ரோஸ்லின் தொடக்கப்பள்ளியில் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் சத்துணவு திட்டத்தின் கீழ் சத்துணவு சமையலராக பணிபுரிந்து பணியிடைக்காலமான அய்யம்மாள் என்பவரது வாரிசுதாரர் சரஸ்வதி என்பவருக்கு கருணை அடிப்படையில் கடையம் ஊராட்சி ஒன்றியம் பாட்டத்தெரு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் சத்துணவு அமைப்பாளராக பணி நியமன ஆணையினை வழங்கி தமிழ்நாடு அரசின் அனைத்து நலத்திட்ட உதவிகளையும் கண்டறிந்து பொதுமக்கள் அனைவரும் பயன்பெற வேண்டுமென வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.இராமச்சந்திரன் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் திட்ட இயக்குநர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மைக்கேல் அந்தோணி பெர்னாண்டோ, மாவட்ட சமூக நல அலுவலர் மதிவதனா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(வேளாண்மை) கனகம்மாள், தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் ஜெயபாரதி மாலதி, உதவி பொறியாளர்(கடட்டம் மற்றும் பராமரிப்பு) சுரேஷ்குமார், உதவி பொறியாளர் (மின்சாரம்) சிவசங்கர், சகி ஒன் ஸ்டாப் சென்டர் மைய நிர்வாகி ஜெயராணி, மாவட்ட ஊராட்சி குழு துணைத் தலைவர் உதயகிருஷ்ணன், தென்காசி ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் ஷேக் அப்துல்லா, தென்காசி ஊராட்சி ஒன்றிய குழு துணைத் தலைவர் கனகராஜ் முத்து பாண்டியன், தென்காசி நகர் மன்ற தலைவர் சாதிர், ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் திவ்யா மணிகண்டன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முத்தையா, மாவட்ட கல்வி அலுவலர்(தொடக்கக்கல்வி) கண்ணன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர் ஜெயப்பிரகாஷ், உதவி இயக்குநர் (மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை) மோகன்ராஜ், ஆய்வாளர் பாலமுருகன், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி) ரா.ராமசுப்பிரமணியன், நகர்மன்ற உறுப்பினர் வசந்தி வெங்கடேசன் மற்றும் அரசு அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.



