மதுரை மாநகரில் பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு ஸ்மார்ட் போலிசிங் திட்டத்தின் படி அவசரகால 100 அழைப்பு புகார்கள் மூலம் காவல் பணியை துரிதபடுத்தவும் காவல்துறை வாகனங்களின் நகர்வுகளை துல்லியமாக கண்காணிக்கவும் பொதுமக்களிடமிருந்து வரும் புகார்களின் மீதான குறைகளை விரைவாக நிவர்த்தி செய்யும் பொருட்டும் மதுரை மாநகரில் காவல் கட்டுபாட்டு அறை மூலம் இயங்க கூடிய 63 இரு சக்கர ரோந்து வாகனங்கள், 21 நான்கு சக்கர ரோந்து வாகனங்கள், 9 Delta ரோந்து வாகனங்கள் மற்றும் 8 வழிக்காவல் ரோந்து வாகனங்கள் உட்பட்ட 101 காவல் வாகனங்களிலும் ரூபாய் 3,83,500/- மதிப்பீட்டில் GPS கருவிகள் பொருத்தப்பட்டு காவல் வாகனங்களை ரோந்து பணிக்கு தமிழக காவல்துறை கூடுதல் இயக்குநர் சட்டம் மற்றும் ஒழுங்கு S.டேவிட்சன் தேவ ஆசீர்வாதம் ஐபிஎஸ் கொடியசைத்து துவக்கி வைத்தார்கள். மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மதுரை மாநகர் காவல் ஆணையர் முனைவர் J.லோகநாதன், ஐபிஎஸ் மற்றும் காவல் கண்காணிப்பாளர்கள் மதுரை மாவட்டம், சிவகங்கை மாவட்டம் மற்றும் விருதுநகர் மாவட்டம் மற்றும் துணை ஆணையர்கள் தெற்கு, வடக்கு மற்றும் தலைமையிடம் மற்றும் காவல் ரோந்து வாகனங்களில் GPS பொருத்துவதற்கு பெரும் உதவி செய்த City Union Bank நிறுவனத்தின் உதவி பொது மேலாளர் நடராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர். காவல்துறை வாகனங்களை GPS கருவி மூலம் கண்காணிக்கும் நடைமுறையின் முக்கிய அம்சங்கள் Dashboard (முகப்பலகம்) GPS கருவிகள் பொருத்தப்பட்ட காவல் வாகனங்களில் உள்ள டேஷ் போர்டு மூலம் எத்தனை வாகனங்கள் சென்று கொண்டுள்ளது என்றும் எத்தனை வாகனங்கள் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது என்பதை துல்லியமாக தெரிந்து கொள்ள இயலும். Live Tracking (நேரலை கண்காணிப்பு):- ஒவ்வொரு வாகனத்தின் இருப்பிடமும், அதன் அப்போதைய செயல்பாடுகளும் தெளிவாக தெரியும் வகையில் வர்ணப்பிரிவுகளுடன் காண இயலும்.
Comprehensive Statistics (ஒட்டு மொத்த புள்ளி விவரங்கள்ர். ஒவ்வொரு வாகனமும் இயங்க ஆரம்பித்த நேரம், ஓட்டம் முடிக்கப்பட்ட நேரம். ஓடிய நேர அளவு வேகத்தின் அளவு ஓடா மீட்டர் அளவுகள். பயண விபரங்கள். பின்னிட்டு பார்க்கும் வசதி, தினமும் ஓடிய தூரம் மற்றும் மொத்த பயண விபரம் ஆகியவற்றை குறிப்பிட்ட நேரத்தில் ஒவ்வொரு வாகனத்திற்கும் துல்லியமாக கணக்கிடலாம். காவல் வாகனங்களில் GPS கருவிகளின் பயன்கள்- மிக விரைவாக செயல்படுதல்: ஒரு வாகனம் எந்த இடத்தில் உள்ளது என்பது உடனடியாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தெரிவதால் 100 அவசர அழைப்புகளின் மூலம் பெறப்பட்ட தகவலின் அடிப்படையில் குற்றம் நடந்த இடத்திற்கு அருகில் உள்ள வாகனத்தை அங்கு செல்ல அறிவுறுத்த இயலும். இதனால் காவலர்கள் விரைவாக சென்று நடவடிக்கை எடுக்க உதவுகிறது. சரியான இருப்பிட நேரத்தை கண்காணித்தல் எந்த ஒரு நேரத்திலும், GPS கருவிகள் பொருத்தப்பட்ட காவல் வாகனங்களை மிகத்துல்லியமாக அதன் இருப்பிடத்தை அறிய இயலும்.
கைதிகளின் வழிக்காவல் வாகனங்களை கண்காணித்தல் கைதிகளை தொலைதூரம் வழிக்காவல் (Escort) எடுத்து செல்லும் வாகனங்களை குறிப்பாக சென்னை, கேரளா, திருநெல்வேலி மற்றும் தஞ்சாவூர் ஆகிய ஊர்களுக்கு செல்லும்போது GPS கருவிகள் மூலம் மேற்படி வாகனங்கள் பாதுகாப்பாக செல்லுமிடத்தை மாநகர காவல் கட்டுப்பாட்டு அறையிலிருந்து துல்லியமாக அறியமுடியும்.
குற்றச்சம்பவங்கள் நடைபெறும் இடங்களை கண்காணித்து குற்ற நிகழ்வுகளை குறைக்க உதவுகிறது: குற்றம் நடந்துள்ள பகுதிகளில் தரவுகளை ஆராய்ந்து, எப்பகுதியில் காய வழக்குகள் அதிகம் பதிவாகும் பகுதிகள் மற்றும் சொத்து தொடர்பான குற்றங்கள் பதிவாகும் பகுதிகள் என கண்டறிந்து அத்தகைய இடங்களில் காவல் வாகனங்களை ரோந்து பணியில் ஈடுபடுத்தி குற்ற நிகழ்வுகளை மாநகர காவல்துறையால் தடுக்க உதவுகிறது



