தஞ்சாவூர் மே.21
அரசு பள்ளிகள் உள் கட்டமைப்பை மேம்படுத்த நிதி உதவி, பொருளு தவி அளிக்க வேண்டும் என தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் வேண்டுகோள் விடுத்தார்.
இது தொடர்பாக அவர் வெளியி ட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிரு ப்பதாவது.
தமிழ்நாடு அரசு பள்ளி கல்வித் துறையின் கீழ் செயல்படும் அரசு பள்ளிகளின் மேம்பாட்டுக்கு சமூக பங்களிப்பு நிதி மற்றும் தனிப்பட்ட பங்களிப்புகளை பெற்றிட “நம்ம ஸ்கூல் -நம்ம ஊரு பள்ளி ” என்ற திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. பள்ளியின் உட்கட்டமைப்பு வசதி களை மேம்படுத்துவதற்கு நிதி அளிப்பது, பொருட்களாக வழங்கு வது, தன்னார்வ சேவை புரிவது வாயிலாக அரசு பள்ளிகளில் அடிப்படைத் தேவைகளை சமூக பங்களிப்புடன் நிறைவேற்ற திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.
பெருநிறுவனங்களின் சமூக பங்களிப்பு நிதியைப் பெற தமிழ்நாடு முதலமைச்சரால் நம்ம ஸ்கூல் -நம்ம ஊரு பள்ளியின் https://nammaschool.tnschool.gov.in
என்ற இணையதளம் மற்றும் தனி வங்கி கணக்கு உருவாக்கப்பட்டு ள்ளது .அரசு பள்ளிகளின் மேம் பாட்டுக்காக பெரு, சிறு, குறு நிறுவ னங்கள் அரசு சாரா தொண்டு நிறுவனங்கள், அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் மற்றும் பொதுமக்கள் பங்களிப்பு அளித்திட உறுதுணையாக உள்ளது
தஞ்சாவூர் மாவட்டத்தில் முதல் கட்டமாக 40 அரசு பள்ளிகளில் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கான பணிகள் நடைபெற்றுக் கொண்டு வருகிறது. இப்பணிகளை மேலும் வலுப்படு த்துவதற்காக பள்ளி கல்வித்துறை சென்னை குழுவை சேர்ந்த அஸ்லாக்சன், சுவாமிநாதன், ஜனனி ஆகியோர் மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப்பை சந்தித்து ஆலோசனை நடத்தினர் . தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளின் உட்கட்டமைப்பு களை மேம்படுத்தக்கூடிய இணை யதளம் வாயிலாக தாராளமாக நிதி உதவி, பொருளுதவி அளிக்க வேண்டும். மேற்கண்டவாறு அதில் கூறப்பட் டுள்ளது.



