தருமபுரி மாவட்டத்தில்
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் தருமபுரி மாவட்ட 15 – ஆவது மாநாடு, தருமபுரி அம்பிகா வாணியர் மஹாலில் நடைபெற்றது.
மாவட்ட தலைவர் எம்.சுருளிநாதன் தலைமைவகித்தார்.மாவட்ட துணைத்தலைவர் எஸ்.குணசேகரன் அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார்.மகளிர்துணைக்குழு அமைப்பாளர் பி.எஸ். இளவேனில் ,வரவேற்றார்.
தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்க மாவட்ட செயலாளர் எம்.பெருமாள் துவக்கிவைத்து பேசினார்.
மாவட்ட செயலாளர் ஏ.தெய்வானை வேலை அறிக்கை வாசித்தார்.மாவட்ட பொருளாளர் எம்.அன்பழகன் வரவு செலவு கணக்கை சமர்ப்பித்தார்.
மாநிலதுணைபொதுச்செயலாளர் மு.சீனிவாசன் சிறப்புறையாற்றினார்.
சிஐடியு மாநில செயலாளர் சி.நாகராசன், இன்சூரன்ஸ் ஊழியர் சங்க கோட்ட இணைசெயலாளர் ஏ.மாதேஸ்வரன்,ஜாக்டோ ஜியோ நிதி காப்பாளர் கே.புகழேந்தி பிஎஸ்என்எல் எம்ளாயீஸ்யூனியன் மாவட்ட செயலாளர் பி.கிருஷ்ணன் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.மாவட்ட துணைத்தலைவர்கள் டி.சண்முகம்,பி
மகேஸ்வரி,மாவட்ட இணைசயலாளர்கள் சி.அழகிரி,பி.கிருஷ்ணமூர்த்தி,கே.வெங்கட்டேசன்,மாவட்ட தணிக்கையாளர் எம்.முனிராஜ், மாநிலசெயற்குழு உறுப்பினர் ஆர்.முருகன் ஆகியோர் தீர்மானங்களை முன்மொழிந்தனர்.
மாநிலதுணைத்தலைவர் கோ.பழணியம்மாள் நிறைவுறையாற்றினார்.முன்னதாக சங்க கொடியேற்றப்பட்டது.
மாநாட்டில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
மாவட்ட தலைவராக எம்.சுருளிநாதன்,மாவட்ட செயலாளராக ஏ.தெய்வானை, மாவட்ட பொருளாளராக எம்.அன்பழகன், மாவட்ட துணைத்தலைவர்களாக எஸ்.குணசேகரன்,பி.சங்கர்,ஆர்.ஜெயவேல், கிருஷ்ணமூர்த்தி,மாவட்ட இணைசெயலாளர்களாக சி.அழகிரி,எம்.முருகன்,கே.தேவகி,செ.ராமன்,மாவட்ட தணிக்கையாளராக ராஜாங்கம்,யாரப்பாஷா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து பழைய பென்ஷன் திட்டத்தை
நடைமுறைப்படுத்த வேண்டும்.
21 மாத கால நிலுவைத் தொகை, முடக்கப்பட்ட அகவிலைப்படி, பறிக்கப்பட்ட சரண்டர் உள்ளிட்ட உரிமைகளை வழங்க வேண்டும் சத்துணவு மற்றும் அங்கன்வாடி வருவாய் கிராம உதவியாளர்கள், ஊர்ப்புற நூலகர்கள், எம்ஆர்பி செவிலியர்கள் உள்ளிட்ட சிறப்பு காலமுறை ஊதியம், தொகுப்பூதியம், மதிப்பூதியம் பெறும் மூன்றரை லட்சம் ஊழியர்களுக்கு வரையறுக்கப்பட்ட கால முறை ஊதியம் வழங்கவேண்டும்