பூதப்பாண்டி – நவம்பர் – 11-
குமரி மாவட்டம் பூதப்பாண்டியை அடுத்துள்ள திட்டுவிளை அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆண்டு விழா நடைபெற்றது விழாவில் 10 -ம் வகுப்புமற்றும் 12வது வகுப்புகளில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளுக்கு பூதப்பாண்டி பேரூராட்சி தலைவர் ஆலிவர்தாஸ் பரிசு வழங்கி சிறப்பித்தார் விழாவில் தலைமை ஆசிரியர் அவிலா போர் ஜியோ ஜாய் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினர்களாக முன்னாள் மாவட்ட கல்வி அதிகாரி ஜெசி ரோச் மற்றும் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் அன்சார் ,கவுன்சிலர் நபிலா மற்றும் பெற்றோர்களும் கலந்து கொண்டார்கள்.