கந்திலி:செப்:05, திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி ஒன்றியத்திற்கு உட்பட்ட திராவிட முன்னேற்றக் கழகத்தின் மத்திய ஒன்றியத்தின் சார்பில் பொது உறுப்பினர்கள் கூட்டம் நந்தனம் கல்லூரி செல்லும் சாலையில் GSR தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு ஒன்றிய கழக செயலாளர் மற்றும் மாவட்ட கவுன்சிலர், மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் வழக்கறிஞர் K.A. குணசேகரன் தலைமையில் நடைபெற்றது. ஒன்றிய துணை செயலாளர் M. சண்முகம் அனைவரையும் வரவேற்று பேசினார். ஒன்றிய துணை செயலாளர் வழக்கறிஞர் M. மாது MA.B.L., மாவட்ட பிரதிநிதிகள் சக்கரவர்த்தி, சசிகுமார், ஆர்வில், சர்க்கரை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளர்களாக மாவட்ட கழக செயலாளர் ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் க.தேவராஜி, திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் அ.நல்லதம்பி ஆகியோர் பங்கேற்று சிறப்பித்தனர்.
மாவட்ட செயலாளர் பேசுகையில்: திருப்பத்தூர் மாவட்டத்தை பொறுத்தவரையில் மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் அவர்களின் ஆணைக்கிணங்க பல்வேறு நலத்திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. மேலும் திராவிட முன்னேற்ற கழகத்தினை சேர்ந்த மூத்த முன்னோடிகளுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் அவர்களுக்காக தலைமை இடத்தில் எடுத்துக் கூறி நலத்திட்டங்களை பெற்றுத்தர வழிவகை செய்து வருகிறோம். எதிர்வரும் அண்ணா நூற்றாண்டு விழா, வாக்காளர் பெயர் சேர்த்தல் நீக்கல், கழகத் தொண்டர்களுக்கு அடிப்படை தேவைகளை ஒன்றிய செயலாளர்கள் நேரடியாக கேட்டறிந்து தீர்வு காண வேண்டும். முப்பெரும் விழாவை சிறப்பாக கொண்டாடுதல், எதிர்வரும் நமது ஆட்சி மீண்டும் வர வேண்டும் என்று குறிப்பிட்டு பேசினார்.
இக்கூட்டத்திற்கு முன்னால் ஒன்றிய கழக செயலாளர், தலைமை செயற்குழு உறுப்பினர் கு. ராஜமாணிக்கம், ஒன்றிய குழு தலைவர் திருமதி திருமுருகன், ஒன்றிய குழு துணை தலைவர் மோகன் குமார், மாவட்ட கவுன்சிலர் C.K. சுப்பிரமணி, பொதுக்குழு உறுப்பினர்கள் S.அரசு, ரகுநாத், மாவட்ட துணை செயலாளர் சம்பத்குமார், மாவட்ட பொருளாளர் ஜோதி ராஜன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் வடிவேல், கூடுதல் அரசு வழக்கறிஞர் ராஜகுமாரன் மற்றும் கந்திலி மதிய ஒன்றியத்திற்கு உட்பட்ட ஒன்றிய பொறுப்பாளர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள், கிளைக் கழக செயலாளர்கள், இளைஞர் அணியினர்,விவசாய அணி மற்றும் கழக தொண்டர்கள் என பலரும் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தின் இறுதியில் செவ்வத்தூர் கிளை கழக செயலாளர் P.பாலு நன்றியுரை வழங்கினார்.