வேலூர் மாவட்டம் ,சி.எஸ்.ஐ .செயின்ட். ஜான் தெலுங்கு சர்ச் கஸ்பா ,வேலூர் மாவட்ட பார்வை இழப்பு சங்கம் மற்றும் சி.எம்.சி. கண் மருத்துவமனை இணைந்து நடத்திய இலவச கண் பரிசோதனை முகாம் கஸ்பா டாக்டர் அம்பேத்கர் நகர் சி. எஸ் .ஐ .செயின்ட். ஜான் தெலுங்கு சர்ச்சில் சேர்மன் ரேவ் எம் .
ஆண்ட்ரூ அண்ணாமலை தலைமையிலும், பொருளாளர் பி. தேவ பிரசாத் முன்னிலையிலும் நடைபெற்றது இதில் கண்களில் நீர் வடிதல், கிட்ட பார்வை ,தூர பார்வை, ஆகியவற்றுக்கான பரிசோதனைகள் மேற்கொண்டு மருத்துவர்கள் ஆலோசனைகள் வழங்கினர். பொருளாளர் ராஜா கண் சிகிச்சை முகாமினை ஏற்பாடு செய்திருந்தார் உடன் சி.எம்.சி. கண் மருத்துவமனை முகாம் ஒருங்கிணைப்பாளர் ஹிட்லர் ஜான் மற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள், பொதுமக்கள், பலர் கலந்து கொண்டனர்.



