சிவகங்கை
ஜூலை 05
சிவகங்கை தன்ராஜ் பிள்ளை ஹாக்கி கழகம் சார்பில் கோடைகால இலவச ஹாக்கிப் பயிற்சி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.
இதில் பிரபல ஹாக்கி வீரர் தன்ராஜ்பிள்ளை பெயரில் சிவகங்கையில் ஹாக்கி பயிற்சி கழகம் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கப்பட்டது
இந்த பயிற்சி கழகம் சார்பில் ஆண்டு தோறும் கோடைகால விடுமுறையில் ஆர்வமுள்ள பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகளுக்கு இலவசமாக ஹாக்கி விளையாட்டுப் பயிற்சி அளித்து வருகிறது.
கடந்த 11 ஆண்டுகளாக சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திலுள்ள விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற கோடை காலப் பயிற்சியை தேசிய விளையாட்டு மேலாண்மை குழுத்தலைவர் டி.எஸ்.பாரூக் தொடக்கி வைத்தார்.
ஏப்ரல் 27 முதல் ஜூன் 10-ஆம் தேதி வரை இலவச பயிற்சி அளிக்கப்பட்டது.
இதில் 9 வயது முதல் 19 வயது வரையுள்ள பள்ளி, கல்லூரி மாணவர்கள் 30 பேர் மாணவிகள் 20 பேர் உள்பட மொத்தம் 50 பேர் பயிற்சி பெற்றனர்.
இதையடுத்து நடைபெற்ற நிகழ்வுக்கு தன்ராஜ்பிள்ளை ஹாக்கி விளையாட்டுக் கழகத்தலைவர் என். நாகமணி தலைமையில் செயலர் சங்கர் முன்னிலை வகித்தார்.
இந்த நிகழ்வில்
சிறப்பு விருந்தினர்களாக போக்குவரத்து காவலர் மகாலிங்கம் ஹாக்கி வீரர் முத்துப்பாண்டியன் தொழிலதிபர் கார்த்திக் ஆகியோர் கலந்து கொண்டு பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு சீருடைகளை வழங்கினர்.
விழா நிறைவில் ஹாக்கி பயிற்சியாளர் மணிபாரதி நன்றி கூறினார்.