தேனி.
தமிழ்நாடு அரசு சார்பில் அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி,தேனி மாவட்டம் வெள்ளையம்மாள்புரம் அரசு கள்ளர் மேல்நிலைப் பள்ளியில் நேற்று பிளஸ் 1 பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியை ச. உத்தண்டலட்சுமி தலைமை வகித்தார்.
இதில் தேனி மாவட்டம் கம்பம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மாண்புமிகு .ந. இராமகிருஷ்ணன் கலந்து கொண்டு பள்ளியில் பிளஸ் 1 பயிலும் 40 மாணவ மாணவியர்களுக்கு விலை இல்லா மிதிவண்டிகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட துணைச் செயலாளர் -இரா. செந்தில்குமார் , ஓடைப்பட்டி பேரூராட்சி சேர்மன் -. இரா. தனுஷ்கோடி ஓடைப்பட்டி பேரூராட்சி துணை சேர்மன் – உ.குமரேசன், மாவட்ட பிரதிநிதி வெற்றிக் கண்ணன், வார்டு செயலாளர் -.இரா. சிங்கப்பெருமாள் ,ஓடைப்பட்டி பேரூராட்சி செயலாளர் – ச.கனகராஜ்,பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் . பெருமாள், வெள்ளையம்மாள்புரம் கிராம கமிட்டி தலைவர் . கோட்டைச்சாமி,கிராம கமிட்டி துணை தலைவர் .கல்யாண சுந்தரம், கிராமக்கமிட்டி செயலாளர் திரு.முனியாண்டி, பொருளாளர் மணிகண்டன் , கிராமக் கமிட்டி உறுப்பினர்கள் .ராமு, .இராஜாங்கம், பள்ளி மேலாண்மை குழு தலைவர் – . ராதிகா, SMC உறுப்பினர்கள் .வாசக தேவி, .கனகராஜ்,பள்ளியின் முன்னாள் மாணவ உறுப்பினர் .பன்னீர் செல்வம், கிராம கமிட்டி உறுப்பினர்கள் மற்றும் பள்ளியின் இருபால் ஆசிரியர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்…
நிகழ்ச்சியின் இறுதியாக பள்ளி உதவி தலைமை ஆசிரியை .மு.நித்யா நன்றியுரை கூறினார் …