தென்காசி மாவட்டம் சுந்தரபாண்டியபுரம் பேரூராட்சி பகுதியில் செயல்பட்டு வரும் அன்னை நல்வாழ்வு டிரஸ்ட் சார்பில் இலவச ஆம்புலன்ஸ் சேவை துவக்க விழா நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு சுந்தரபாண்டியபுரம் அன்னை நல்வாழ்வு டிரஸ்ட் நிர்வாகி பி.இராஜேந்திரன் தலைமை தாங்கினார். அன்னை நல்வாழ்வு டிரஸ்ட் செயலாளர் ஆர்.கிறிஸ்டி மற்றும் உறுப்பினர்கள் வி.இசக்கி முத்து, அந்தோணியம்மாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களாக தென்காசி சட்டமன்ற உறுப்பினர் எஸ் பழனி நாடார் ,தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் சுரண்டை
வே.ஜெயபாலன் ஆகியோர் கலந்துகொண்டு ஆம்புலன்ஸ் சேவையினை துவக்கி வைத்தனர். சுந்தரபாண்டியபுரம் அன்னை நல்வாழ்வு டிரஸ்ட் மூலம் துவக்கப்பட்டுள்ள இந்த இலவச ஆம்புலன்ஸ் சேவை சுந்தரபாண்டியபுரம் மற்றும் சுற்று வட்டார பகுதியில் வாழும் பொது மக்களின் நலனுக்காக துவங்கப்பட்டுள்ளது. இந்த ஆம்புலன்ஸ் சுந்தரபாண்டியபுரம் பஸ்ஸ்டாண்ட் பகுதியில் நிறுத்தி வைக்கப்படும் பொதுமக்கள் தங்களின் அவசர மருத்துவ தேவைக்கு 24 மணி நேரமும் இலவசமாக பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தெரிவித்தனர்.
இந்த நிகழ்ச்சியில் தென்காசி கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் ஆர் எம் அழகு சுந்தரம், சுந்தரபாண்டியபுரம் பேரூர் திமுக செயலாளர் வே. பண்டாரம், சுந்தரபாண்டியபுரம் பேரூராட்சி மன்றத் தலைவர் காளியம்மாள் செல்வக்குமார், தென்காசி மாவட்ட தொழிலாளர் அணியின் தலைவர் மாரிமுத்து பாண்டியன், தென்காசி ஒன்றிய திமுக அவைத்தலைவர் திருச்சிற்றம்பலம் தங்கபாண்டியன், ஒன்றிய திமுக துணைச் செயலாளர் ஐ டி முக்கு ஆனந்தன், சாம்பவர் வடகரை காவல் நிலைய உதவி ஆய்வாளர் முத்துப்பாண்டி, பாட்டாக் குறிச்சி பி.சுப்பிரமணியன், சுந்தரபாண்டியபுரம் தங்கராஜ், கணேசன், ஐயப்பன், கசமாடன், மாரிமுத்து, பாலன், கணபதி தேவர் ,கணபதி நாடார், சுந்தரபாண்டியபுரம் காங்கிரஸ் பேரூர் தலைவர் முப்பிடாதி பாண்டியன் உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் சுந்தரபாண்டியபுரம் அன்னை நல்வாழ்வு டிரஸ்ட் நிர்வாகி பி.இராஜேந்திரன் அனைவருக்கும் நன்றி கூறினார்.