நாகர்கோவில் நவ 15
இரு சக்கர வாகனத்தில் நான்கு நபர்கள் பயணம் – ரூ.7200 அபராதம் விதித்து வாகனம் பறிமுதல்- ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்து நடவடிக்கை எடுத்த போக்குவரத்து போலீசார்.
கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் உத்தரவின் பேரில் நாகர்கோவில் உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் லலித்குமார் மேற்பார்வையில் நாகர்கோவில் உட்கோட்டத்தில் சாலை விபத்து தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக நேற்று
நாகர்கோவில் போக்குவரத்து காவல் ஆய்வாளர் வில்லியம் பெஞ்சமின் தலைமையில் சார்பு ஆய்வாளர் சுமித் ஆல்ட்ரின், மற்றும் காவலர்கள் இராமன் புதூர் பகுதியில் போக்குவரத்தை ஒழுங்கு படுத்திக் கொண்டிருந்தனர்.
அப்போது பறக்கையைச் சேர்ந்த ரிஷிகேஷ் என்பவர் இருசக்கர வாகனத்தில் பின்புறம் மூன்று நபர்களை ஏற்றிக்கொண்டு, மொத்தம் நான்கு பேராக வந்ததைக் கண்டு அவர்களை நிறுத்தி இரண்டு பேர் பயணம் செய்யக்கூடிய இருசக்கர வாகனத்தில் நான்கு பேராக பயணம் செய்ததால் அவர்கள்
நான்கு நபர்கள் வந்த இருசக்கர வாகனத்திற்கு ரூ.7200 அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் நான்கு பேராக வந்த அவர்களுடைய இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது மட்டுமல்லாமல் இருசக்கர வாகன ஓட்டுநரின் உரிமத்தை ரத்து செய்ய பரிந்துரை செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டது.