சங்கரன்கோவில் சட்டமன்றத் தொகுதி குலசேகரமங்கலம் கிராமத்தில் சட்டமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து ரூபாய் 12 லட்சம் மதிப்பீட்டில் புதிய ரேஷன் கடை அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி நடந்தது. இதில் தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏ கலந்துகொண்டு புதிய கட்டிடம் கட்டும் பணியை அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார்.
இதில் மேலநீலிதநல்லூர் மேற்கு ஒன்றிய செயலாளர் ராமச்சந்திரன், துணைச் செயலாளர் செல்லத்துரை, வினுசக்கரவர்த்தி முத்துமாரி கவுன்சிலர் வெள்ளத்துரை,பொருளாளர் பண்டாரகண்ணு, ஊராட்சி மன்ற தலைவர் மகேஷ், ராஜேந்திரன் மணிகண்டன், ஜே பி ஆர் மணி, கடற்கரைச்சாமி, பெல்ஸ், நவமணிபாண்டியன், வெளியப்பன் சரவணன்,இளைஞரணி முருகன், சிவசக்தி மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்



