சங்கரன்கோவில், செப். 01 –
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சட்டமன்றத் தொகுதி மேலநீலிதநல்லூர் கிழக்கு ஒன்றியம் தெற்கு பனவடலி கிராமத்தில் டிடீடிஏ பள்ளியில் புதிய கட்டிடம் திறக்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு பேராயர் பர்னபாஸ் தலைமை வகித்தார். ஆரம்ப மற்றும் நடுநிலைப்பள்ளி மேலாளர் ஸ்டீபன் முல்லர் முன்னிலை வகித்தார். புதிய பள்ளி கட்டிடத்தை பேராயர் பர்னபாஸ் பிரதிஷ்டை செய்து வைத்தார். இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட தென்காசி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் ராஜா எம்எல்ஏ பள்ளி கட்டிடம் கட்டுவதற்காக ரூபாய் 25,000 நிதி வழங்கி புதிய பள்ளி கட்டிடத்தின் கல்வெட்டை திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் மேலநீலிதநல்லூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் பெரியதுரை, பள்ளி தலைமை ஆசிரியை விக்டோரியா, சேகரகுரு, திரவிய ராஜேஷ், உதவி ஆசிரியர் ராஜ பாண்டியன், சேகரத் தலைவர் ஜெயக்குமார், சங்கரன்கோவில் நகர செயலாளர் பிரகாஷ், மாவட்ட பிரதிநிதி சண்முகப்பாண்டியன், மாவட்ட இலக்கிய அணி துணை அமைப்பாளர்
பூலியூர் கணேசன், தகவல் தொழில்நுட்ப அணி வீமராஜ், கிளைக் கழக செயலாளர் திலீப், ஆசிர்வாதம் மாணவரணி மெகுமான் மற்றும் பொதுமக்கள், பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.



