நாகர்கோவில் செப் 7
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அழகுமீனா உத்தரவின் பேரில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகள் நேற்று கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் மீன் சந்தைகளில் சோதனையில் ஈடுபட்டனர். அழகப்பபுரம், கொட்டாரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் குமரி மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். கொட்டாரம் பேரூராட்சிக்கு உட்பட்ட சந்தையில் உணவு பாதுகாப்பு அதிகாரி சக்தி முருகன் தலைமையில் நடத்திய சோதனையில் கெட்டுப்போன மீன்கள் விற்பனை செய்வது கண்டறியப்பட்டு அந்த மீன்களை உணவு பாதுகாப்பு அதிகாரிகள் குழுவினர் கீழே கொட்டி அழித்தனர். அதேபோல் நாகர்கோவில் பகுதியில் நடை பெற்ற சோதனையின் போது கெட்டுப்போன 210 கிலோ மீன்கள் கண்டுபிடிக்கப்பட்டு உணவு பாதுகாப்புத் துறையினரால் அழிக்கப்பட்டது. மேலும் கெட்டுப்போன மீன்களை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது.