தமிழ்நாடு உணவு பாதுகாப்பு துறை ஆணையர் அவர்களின் உத்தரவுன்படி திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அவர்களின் அறிவுறுத்தலின்
படியும்
திருப்பூர் ஜூலை:10
திருப்பூர்மாவட்டம் தாராபுரத்தில் உள்ள ஒட்டன்சத்திரம், பழனி பைபாஸ் ரோட்டில் உள்ள ஹோட்டல்கள் மற்றும் பேக்கரிகளில் உணவு பாதுகாப்பு பிரிவு நியமன அலுவலர் மருத்துவர். விஜய லலிதாம்பிகை தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர் ரகுநாதன், சிரஞ்சீவி, பாலமுருகன், ஆகியோர் அடங்கிய குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வின் போது உணவு பொருட்களை பொட்டலம் இடுவதற்கு பாலித்தீன்
கேரி பேக்குகளை பயன்படுத்திய ஏழு கடைகளுக்கு தலா 2000 ரூபாய் வீதம் 14 ஆயிரம் ரூபாயும் உணவு பொருளை சுத்தமாக கையாளாத 4 கடைகளுக்கு தலா 1000 ரூபாய் வீதம் 4 ஆயிரம் ரூபாயும் ஆக மொத்தம் 18 ஆயிரம் ரூபாய் அபராதமாக விதிக்கப்பட்டு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. மேலும் ஒரு கடைக்கு முன்னேற்ற அறிவிப்பு ( improvement notice) வழங்கப்பட உள்ளது. மொத்தமாக செயற்கை நிறமூட்டப்பட்ட உணவுப் பொருட்கள் (காளான் காலிஃப்ளவர் சில்லி) 10 கிலோ பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டது. காலாவதியான குளிர்பானங்கள் 9 லிட்டர் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டது. மேலும் காலாவதியான ரஸ்க், பன் 3 கிலோ பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டது. மேலும் செய்தித்தாள்கள் மேல் வைக்கப்பட்டிருந்த போண்டா பஜ்ஜி போன்ற 8 கிலோ அளவுள்ள உணவு பொருட்கள் பறிமுதல் செய்து அழிக்கப்பட்டது. மேலும் கடை உரிமையாளர்களுக்கு கீழ்காணும் அறிவுரைகள் வழங்கப்பட்டன.
சமைத்த உணவுப் பொருட்கள் குளிர்சாதன பெட்டியில் வைக்கக் கூடாது
மட்டன் சிக்கன் மற்றும் மீன் தொடர்பான இறைச்சிகள் வாங்கும் பொழுது உடன் பில் பெற்று வைத்திருக்க வேண்டும்.
அன்றாடம் தேவைப்படக்கூடிய அளவிலான மட்டன் சிக்கன் மட்டுமே வாங்கி பயன்படுத்த வேண்டும். நிறமிகள் பயன்படுத்தி உணவு பொருட்கள் தயாரிக்க கூடாது.
இறைச்சி வகைகள் சமைத்த நான்கு முதல் ஐந்து மணி நேரத்திற்குள் பயன்படுத்தப்பட வேண்டும்.
உணவக உரிமையாளர்கள் அரசால் வழங்கப்படும் பயிற்சி சான்றிதழ் கட்டாயம் பெற்று இருக்க வேண்டும்
பணியாளர்களின் தன் சுத்தம் பராமரிக்க வேண்டும்.
பயன்படுத்திய எண்ணெயை RUCO திட்டத்திற்கு கொடுத்து உரிய தொகை மற்றும் ரசீது பெற்றுக் கொள்ள வேண்டும்.
சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதோடு சமைப்பதற்கும் பயன்படுத்த வேண்டும்.
பிளாஸ்டிக் பையில் உணவு பொருளை பார்சல் செய்வதை தவிர்க்க வேண்டும்
செய்தித்தாள்களை வைத்து உணவு பொருட்கள் பரிமாறுவதை தவிர்க்க வேண்டும்.
சமைத்த உணவு பொருட்களை தொடர்ந்து சரியான உரிய வெப்ப நிலையில் வைத்து பராமரிக்க வேண்டும்.
டெங்கு காய்ச்சலை பரப்பும் கொசு உற்பத்தியாகாமல் தண்ணீர் தேங்காமல் தண்ணீர் தொட்டிகளை முறையாக மூடி தூய்மையாக பராமரிக்க வேண்டும்.
மேலும் உணவுப்பொருள் சம்பந்தமான புகார்களுக்கு பொதுமக்கள் 9444042322 என்ற whatsapp எண்ணில் தங்களது புகார்களை தெரிவிக்கலாம் என்று உணவு பாதுகாப்பு துறையின் சார்பாக தெரிவிக்கப்படுகிறது.



