நாகர்கோவில் ஜூன் 21
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் நீதிமன்ற வளாகத்தில் உள்ள வழக்கறிஞர் சங்க கட்டத்தில் முதல் முறையாக புத்தக கண்காட்சி நடைப்பெற்றது.
நீதிமன்றங்களில் வழக்கமாக லோக் அதாலத் போன்று நிகழ்சிகள் மட்டுமே அடிக்கடி நடத்தப்பட்டு வருகின்றன . ஆனால் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர் சங்கம் சார்பாக முதன் முறையாக நீதி மன்ற வளாகத்தில் உள்ள வழக்கறிஞர் சங்க கட்டிடத்தில் புத்தக கண்காட்சி நடத்தப்பட்டது. இதில் சட்ட புத்தகம் முதல் பொது அறிவு, சமூக சிந்தனை, புத்தர் போன்றவர்களின் படைப்புகள் அடங்கிய புத்தகங்கள் ஏராளமாக இடம் பெற்றன . நீதிமன்றத்திற்கு வரும் குற்றவாளிகள். விசாரனை கைதிகள், பாதிக்கப்பட்ட பொதுமக்கள் அனைவரும் மனம் திருந்தும் வகையில் இந்த புத்தக கண்காட்சி முதன் முறையாக நடத்தப்பட்டதாக நாகர்கோவில் வழக்கறிஞர் சங்கம் தெரிவித்து உள்ளது.இந்த முயற்சிக்கு பல்வேறு தரப்பிலும் வரவேற்ப்பு பெற்று உள்ளது.