உங்களைத்தேடி
உங்கள் ஊரில் சிறப்புத் திட்ட முகாம்
தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் வட்டத்தில் மக்களை தேடி, மக்கள் குறைகளை கேட்டு, உடனுக்குடன் தீர்வு காண அரசு இயந்திரம் களத்திற்கே வரும்
உங்களைத்தேடி உங்கள் ஊரில் சிறப்புத் திட்ட த்தினை தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்ததை யொட்டி இத்திட்டத்தின் கீழ் முகாம் மாவட்ட ஆட்சித்தலைவர் பிரியங்கா பங்கஜம் தலைமையில் நடைபெற்றது. இம்முகாமில்
பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார்.
தஞ்சாவூர் மாவட்டம், திருப்பனந்தாள் பேரூராட்சி வீராக்கன் ஊராட்சியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மற்றும் உயர்நிலைப் பள்ளிகளில் மாணவ, மாணவியர்களின் கல்வித் திறனை ஆய்வு செய்து நன்றாக படிக்குமாறு அறிவுறுத்தினார்.முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம், சமையல் கூடத்தினை பார்வையிட்டு, தரமாக உணவளிக்க அறிவுறுத்தினார்.
அதை தொடர்ந்து, திருப்பனந்தாள் அரசு மருத்துவமனையில் ஆய்வு செய்து சிகிச்சைக்காக வந்திருந்த பொதுமக்களிடம் மருத்துவமனை யில் நல்ல முறையில் சிகிச்சை அளிக்கப்படுகிறதா என மூதாட்டி யிடம் கேட்டறிந்தார்.
திருப்பனந்தாள் பேரூராட்சி அலுவலகத்தின் செயல்பாடுகள் குறித்தும், பேரூராட்சியில் வளம் மீட்பு பூங்காவினை ஆய்வுசெய்தார் . ரூ.10.30 இலட்சம் மதிப்பில் (உரம் படுக்கை) தரைத்தளம் மற்றும் ரூ.13.50 இலட்சம் மதிப்பில் மக்கும் கழிவுகளிலிருந்து உரம் தயாரிக்கும் பணிகளையும், அணைக்கரையில் துணை
சுகாதார நிலையத்தில் மருந்துகள் இருப்பு, பொதுமக்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்தும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
திருவிடைமருதூர் வட்டத்தில் கோணுலம்பள்ளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் செயல்பாடுகளையும், பந்தநல்லூரில் வருவாய்ஆய்வாளர் அலுவலகப் பணிகளையும் ஆய்வு செய்தார்.
பந்தநல்லூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் மாணவ மாணவிகளுடன் அமர்ந்து மதிய உணவினை சாப்பிட்டார். ஆடுதுறை நெல் ஆராய்ச்சி நிலையத்தில் மாநிலங்களவை உறுப்பினர்கள் எஸ்.கல்யாணசுந்தரம் மு.சண்முகம் மயிலாடுதுறை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செ.ராமலிங்கம் ஆகி
யோருடன் கலந்துரையாடினார்
தொடர்ந்து ஆடுதுறை தேர்வு நிலை பேரூராட்சி பேருந்து நிலையத்தில் கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.317 இலட்சம் மதிப்பில் பேருந்து நிலையம் மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருவதை பார்வை யிட்டு ஆய்வு செய்தார்.
அதனைத் தொடர்ந்து, திருவிடைமருதூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு முதலமைச்சரின் உங்களைத்தேடி உங்கள் ஊரில் சிறப்புத் திட்ட முகாமில் அனைத்து த் துறை அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்ட பணிகள் குறித்த ஆய்வு கூட்டத்தில் பொதுமக்களிட மிருந்து பல்வேறு கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டு, அனைத்து மனுக்களுக்கும் தீர்வு காண சம்பந்தப்பட்ட அலுவலர்களு க்கு உத்தரவிட்டார். சிறப்புத்திட்ட முகாமில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் பிரதம மந்திரி மீன் வள மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் தலா ரூ.75 ஆயிரம் மதிப்பில் குளிர்காப்பு பெட்டியுடன் கூடிய இருசக்கர வாகனம் 3 பயனாளிகளுக்கும், 7 பயனாளிகளுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டைகளும் மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார்.
மாவட்ட வருவாய் அலுவலர் .தியாகராஜன் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் முனைவர்.பாலகணேஷ் உதவி ஆட்சியர் (பயிற்சி) உத்கர்ஷ் குமார் கும்பகோணம் வருவாய் கோட்டாட்சியர் பூர்ணிமா உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) சதாசிவம் பேரூராட்சிகள் உதவி இயக்குநர் மாஹின்அபூபக்கர் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் மணிகண்டன் திருவிடைமருதூர் வட்டாட்சியர்பாக்கியராஜ் , வட்டார வளர்ச்சி அலுவலர் காந்திமதி
மற்றும் அனைத்துத் துறை அலுவலர்களும் முகாமில், கலந்து கொண்டனர்.