சென்னை, ஆகஸ்ட், 04, போதை ஒழிப்பு மக்கள் நல கூட்டமைப்பின் சார்பில் மக்கள் நல்வாழ்வு கட்சியின் மாநிலத் தலைவர் இ.ராமதாஸ் தலைமையில் மது ஒழிப்பு போராளி சசி பெருமாள் 9ஆம் ஆண்டு நினைவு தினத்தில் சென்னை எழும்பூர் இராஜ ரத்தினம் விளையாட்டு அரங்கம் அருகில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.
இந்த உண்ணாவிரத போராட்டத்தில் ஆம்ஆத்மி கட்சியின் மாநிலத் த்தலைவர் வசீகான் , பாவலர் இராமச்சந்திரன், ஏர்போர்ட் மூர்த்தி தமிழ்நாடு வணிகர் சங்க தலைவர் அருண்குமார் மற்றும் பலர் இந்த உண்ணா விரத போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து உரையாற்றினர்.
மேலும் இந்நிகழ்ச்சியில்
புரட்சி தமிழர் மக்கள் கழகம்எம்..ஜி..எம்.,ஆனந்த் ராஜ், காமராஜ் மக்கள் கட்சி தலைவர் ரங்கராஜன், ஜெ பணி விவசாயி ஜெயராமன், சி.என்.குமார், அண்ணா துரை, ஆர்.டி.ஐ. நாகராஜன், சபீர் அகமது, குட்டம் சிவாஜி முத்துகுமார் உள்ளிட்ட ஏராளாமான மதுவுக்கு எதிரான தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்