நாகர்கோவில் ஜூலை 30
டாஸ்மாக் மதுக்கடையை நிரந்தரமாக மூட கோரி தமிழ்நாடு சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் ராஜேஷ் குமார் எம் எல் ஏ கோழிவிளை பகுதியில் மாபெரும் தொடர் உண்ணாவிரதம்.
கன்னியாகுமரி மாவட்டம், கிள்ளியூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, கோழிவிளை சந்திப்பில் பொதுமக்களுக்கு இடையூறாக அமைந்திருக்கும் டாஸ்மாக் மதுக்கடை மற்றும் பாரை நிரந்தரமாக மூடக்கோரி கிள்ளியூர் சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் கட்சி சார்பில் நேற்று காலை முதல் கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினரும் தமிழ்நாடு சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவருமான ராஜேஷ் குமார் தலைமையில் மழையையும் பொருட்படுத்தாமல் கோழிவிளை சந்திப்பில் மாபெரும் தொடர் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.
இந்த போராட்டத்தில் குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் பினுலால் சிங், விளவங்கோடு சட்டமன்ற உறுப்பினர் தாரகை கத்பர்ட் மற்றும் காங்கிரஸ் கட்சியின் வட்டார, நகர தலைவர்கள், மாநில, மாவட்ட, வட்டார நிர்வாகிகள், பேரூராட்சி, ஊராட்சி காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள், துணை அமைப்புகளின் மாவட்ட, வட்டார தலைவர்கள், காங்கிரஸ் கட்சியின் உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் பேரியக்க தோழர்கள் மற்றும் இப்பகுதி பொதுமக்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டுள்ளனர். இதனால் குமரி மாவட்டத்தில் பரபரப்பான நிலை ஏற்பட்டுள்ளது.