அரியலூர்,டிச;14
அரியலூர் மாவட்டம் செந்துறை வட்டம் அயன் தத்தனூர் வருவாய் கிராமம் ஆனைவாரி ஓடையில் வடகிழக்கு பருவமழை காரணமாக வெள்ள பெருக்கு ஏற்பட்டதில் மழை வெள்ளம் புகுந்து நெற்பயிர்கள் சேதம் அடைந்தது. இதனால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர். அயன்தத்தனூர் வருவாய் கிராமம் புல எண் 194/2 -ல் விவசாயி ஒருவர் மழையில் நனைந்தபடி தனது வயலில் நெற்பயிர்ளை காண்பிக்கும் செந்துறை வட்டாரத்தில் பெய்து வரும் கனமழையால் ஆறு , ஓடை , ஏறி போன்ற நீர் பிடிப்பு பகுதிகள் நிரம்பி வருவதால் விவசாயிகள் பயிரிட்டுள்ள நெல் மணிகள் சேதம் அடைந்து வருகிறது. எனவே அரசு கவனத்தில் கொண்டு நீரில் மூழ்கிய நெல் மணிகள் உரிய இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை.
அரியலூர் மாவட்ட செய்தியாளர் வினோத்குமார்