By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: வேதனையில் கஞ்சி காய்ச்சும் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > வேதனையில் கஞ்சி காய்ச்சும் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்
கனஂனியாகுமரிமாவட்டம்

வேதனையில் கஞ்சி காய்ச்சும் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்

Last updated: July 15, 2024 11:34 am
July 15, 2024
78 Views
Share
SHARE

நாகர்கோவில் ஜூலை 14 

 

 

 தமிழக நீர்வளத்துறை அமைச்சர்  சட்டப்பேரவையில் கூறிய அறிவிப்பு கானல் நீரானது. தோவாளை சாணல் சீரமைப்பு பணிகள் நிறைவடையாததால் தண்ணீர் திறந்து விட முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பயிர்கள் கருகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து செண்பகராமன்புதூரில் கஞ்சி காய்ச்சும் போராட்டதில் ஈடுபட்டனர். நடைபெற்ற கஞ்சி காய்ச்சும் போராட்டமானது  முன்னாள் அமைச்சரும், கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினருமான  என்.தளவாய்சுந்தரம் தலைமையில் நடைபெற்றது.

 தேவாளை தெற்கு ஒன்றிய கழகச் செயலாளரும், ஆரல்வாய்மொழி பேரூராட்சித் தலைவருமான சி.முத்துக்குமார் அனைவரையும் வரவேற்று பேசினார். தளவாய்சுந்தரம், கஞ்சி காய்ச்சும் போராட்டத்தினை தலைமை ஏற்று தொடங்கி வைத்து அவர் பேசியதாவது:-

 கன்னியாகுமரி மாவட்டத்தில் தோவாளை சாணல் மிகவும் முக்கியமான சாணலாகும். இச்சாணலின் மூலம் சுமார் 8 ஆயிரம் ஏக்கர் பாசன நிலங்கள் பயன் பெறுகின்றன. பேச்சிப்பாறை அணை கடந்த ஜுன் மாதம் 1-ம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. காட்டுப்புதூர் அருகே துவச்சி என்ற இடத்தில் தொடர்ந்து இரண்டு ஆண்டுகளாக உடைப்பு ஏற்பட்டது. ஆனால் அந்த உடைப்பு முறையாக சரி செய்யப்படவில்லை. மேலும் நீர்வளத்துறை அலுவலர்கள் முறையாக கண்காணிப்பு செய்யாமல், ஆண்டு தோறும் மேற்கொள்ளும் தூர் வாரும் பணிகளை செய்யவில்லை. அடைப்புகள் அதிகமாக இருந்ததாலும், கூடுதலாக அளவுக்கு அதிகமாக தண்ணீர் வந்ததாலும். இதில் அதே பகுதியில் உடைப்பு ஏற்பட்டு இருக்கிறது. உடைப்பை சரி செய்கின்ற பணி தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது. என்றாலும் பணிகள் இன்னும் நிறைவு பெறவில்லை. இதனால் விவசாயிகள் பாதிக்கப்பட்டு ; 8 ஆயிரம் ஏக்கர் பாசன நிலங்கள் பாதிக்கபபட்டுள்ளன. இது குறித்து, சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தில் பதில் அளிக்க கோரியிருந்தேன். இதற்கு பதிலளித்த  நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரபலமான கால்வாய் தோவாளை. இந்த கால்வாயில் ஏற்பட்ட உடைப்பை ரூ. 14 கோடியில் நிரந்தரமாக உடைப்பு ஏற்படாத வகையில் பணியை செய்து கொண்டிருக்கிறோம். இந்த பணியை முழு வீச்சில் முடித்து 20 நாட்களுக்குள்ளாக தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்திருந்தார்கள். அறிவித்து சொன்ன நாட்கள் கடந்த பின்பும் பணிகள் முடிந்தபாடில்லை. இதனால் அணையிலிருந்து தோவாளை சாணலுக்கு தண்ணீரும் திறக்கவில்லை. மழை தண்ணீரை கொண்டு பயிர் செய்துள்ள விவசாயிகள் கன்னிப்பூ சாகுபடிக்கு தேவையான தோவாளை சாணல் தண்ணீர் கிடைக்காததால் பெரும் துன்பத்திற்கு ஆளாகி உள்ளார்கள். விவசாயிகளை பாதுகாக்க  அரசு, தவறி விட்டது. விவசாயிகளை மீளாத் துயரத்திற்கு ஆளாக்கி உள்ளது. விவசாயிகள் தங்கள் எதிர்ப்பை அரசுக்கு தெரிவிக்கும் நோக்கத்தோடு, மாபெரும் கஞ்சி காய்ச்சும் போராட்டம் நடைபெறுகிறது. இப்பணிகளை காலம் தாழ்த்தாமல் நிறைவேற்றுவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள  வேண்டும் என்று அவர் பேசினார்.

 இந்த போராட்டத்தில் அனந்தனார் பாசன சங்க தலைவர் செண்பக சேகரபிள்ளை, கழக விவசாய அணி துணைச் செயலாளர் தாணுபிள்ளை, குமரி கிழக்கு மாவட்ட விவசாய அணி செயலாளர் பாலமுருகன், செண்பகராமன்புதூர் விவசாய சங்க தலைவர் ராக்கிசமுத்து, பி.பி. சாணல் பகிர்மான குழுத்தலைவர் முருகேசபிள்ளை, திருப்பதிசாரம் விவசாய சங்க தலைவர் கோலப்பன், தோவாளை ஒன்றிய இயற்கை விவசாய பிரிவு செயலாளர் கருணாநிதி, கழக வர்த்தக அணி இணைச் செயலாளர் ராஜன், கழக வழக்கறிஞர் பிரிவு துணைச் செயலாளரும், மாவட்ட கவுன்சிலருமான பரமேஸ்வரன், கழக இலக்கிய அணி இணைச் செயலாளர் சந்துரு, மாவட்ட கழக இணைச் செயலாளரும், தோவாளை ஊராட்சி ஒன்றிய குழுத்தலைவர் சாந்தினிபகவதியப்பன், மாவட்ட கழக துணைச் செயலாளர் சுகுமாரன், கழக பொதுக்குழு உறுப்பினர் மகராஜபிள்ளை, நாகர்கோவில் பகுதி கழகச் செயலாளர்கள் ஜெயகோபால், முருகேஷ்வரன், மாவட்ட வர்த்தக அணி செயலாளர் சந்திரன் உட்பட பலர் பேசினார்கள். தோவாளை தெற்கு ஒன்றிய இளைஞர் பாசறை செயலாளர் பாபு நன்றி கூறினார்.

கழக சிறுபான்மையினர் நலப்பரிவு துணைச் செயலாளர் லதாசந்திரன், கிழக்கு மாவட்ட கழக துணைச் செயலாளர் பார்வதி, அகஸ்தீஸ்வரம் வடக்கு ஒன்றிய கழகச் செயலாளர் ஜெஸீம், அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய கழகச் செயலாளர் தினேஷ், நாகர்கோவில் பகுதி கழகச் செயலாளர் ஜெபின்விசு, கிழக்கு மாவட்ட அணிச் செயலாளர்கள் ராஜாராம், அக்சயாகண்ணன், வைகுண்டமணி, இறச்சகுளம் ஊராட்சித் தலைவர் நீலகண்ட ஜெகதீஸ், தோவாளை ஊராட்சி ஒன்றிய குழு துணைத்தலைவர் ஷேக், தாழக்குடி பேரூர் கழகச் செயலாளர் பிரம்மநாயகம், ஞாலம் ஜெகதீஸ், கடுக்கரை ஐயப்பன், ஆரல் பேரூர் கழகச் செயலாளர் சுடைலையாண்டி, தோவாளை தெற்கு ஒன்றிய விவசாய அணி செயலாளர் தர்மர், பீமநகரி ஊராட்சி கழக பொறுப்பாளர் செல்வம், தாழக்குடி முன்னாள் பேரூராட்சித் தலைவர் ரோகிணி மற்றும் கழக நிர்வாகிகள், விவசாயிகள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம்
சிறுபாசன கண்மாய்கள் புதுயிர் ஊட்டுதல்
பாறை உடைக்க பயன்படுத்திய கம்பரசருடன் ஒருவர் கைது
தின தமிழ் நாளிதழ் செய்தி எதிரொலி – சாய்ந்த மின் கம்பம் சரி செய்யப்பட்டது
தீபாவளி பரிசு பொருட்கள்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தருமபுரிமாவட்டம்

இளைஞர் அணி சார்பில் மாவட்ட இளைஞரணி

December 9, 2024
41 Views
சுகாதாரமற்ற முறையில் செயல்படும் கடைகள் மீது நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு மேயர் உத்தரவு
பேட்ரீசியன் கல்லூரியின் வெள்ளி விழா; அமைச்சர் கோவி.செழியன் பங்கேற்பு
முசிறியில் விபத்து இழப்பீடு வழங்காத 2 அரசு பேருந்துகள் ஜப்தி
ஆறுகாணியில் அரசு பள்ளி உதவியாளர் தூக்கிட்டு தற்கொலை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account