மதுரை டிசம்பர் 24,
மதுரையில் செய்தியாளர்களுக்கான கண் பரிசோதனை முகாம்
மதுரை மாவட்ட செய்தியாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கான கண் பரிசோதனை முகாம் மதுரை மாட்டுத்தாவணி பகுதியில் உள்ள மதுரை செய்தியாளர்கள் சங்க அரங்கில் நடைபெற்றது. இதில் ஸ்ரீ ராம்சந்திரா கண் மருத்துவமனை தலைமை மருத்துவர் டாக்டர் சீனிவாசன் தலைமையில் முகாம் நடைபெற்றது. இதில் செய்தியாளர்கள், ஒளிப்பதிவாளர்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தினர் என நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.