தருமபுரி மாவட்டத்தில் பேருந்து வழித்தடம் நீட்டிப்பு செய்யக்கோரி அளிக்கப்பட்ட மனுக்களின் பேரில் எடுக்கப்பட்ட நடவடிக்கையாக பாளையம் புதூர், பென்னாகரம், இண்டூர் உள்ளிட்ட ஐந்து நீட்டிக்கப்பட்ட வழித்தட பேருந்துகளை மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி சாந்தி, மற்றும் தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் ஆ. மணி ஆகியோர் கொடிய சைத்து துவக்கி வைத்தனர். உடன் நகர மன்ற தலைவர் லட்சுமி நாட்டான் மாது, போக்குவரத்து பொது மேலாளர் செல்வம், நகர மன்ற செயலாளர் நாட்டான் மாது, நகரத் துணைச் செயலாளர் முல்லைவேந்தன், ஒன்றிய செயலாளர் கோபால் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.



