சென்னை, மே 28
தமிழ்நாட்டு மாணவர்கள் உலகத்தரத்திலான பாடத்திட்டங்கள் குறித்த Global Exposure பெற வேண்டும் என்ற இலக்குடன் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ‘நான்_முதல்வன்’ Scholars for Outstanding Undergraduate Talent in Tamil Nadu (SCOUT) திட்டத்தை தொடங்கி வைத்தார்கள்.
இத்திட்டத்தின் மூலம், தென் கொரியாவின் புகழ்பெற்ற Gachon University மற்றும் Pusan National University-யில் International Internship Training முடித்து திரும்பியுள்ள, தமிழ்நாட்டின் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளைச் சேர்ந்த 6 மாணவ – மாணவியரை இன்று நேரில் சந்தித்து அவர்களது அனுபவத்தைக் துணை முதல்வர் உதயநிதி கெட்டரிதர்.
எளிய குடும்பச் சூழல் மற்றும் முதல் தலைமுறையாக கல்லூரிக்குச் செல்லும் இம்மாணவர்கள், கொரியாவில் தங்களுக்குக் கிடைத்த அறிவுசார் அனுபவங்களை துணை முதல்வர் உதயநிதி உடன் பகிர்ந்து கொண்டனர்.
மேலும், தென் கொரியாவில் மேற்படிப்பு படிப்பதற்கான சூழல், அங்குள்ள வேலைவாய்ப்புகள் மற்றும் கல்வி முறைகள் குறித்தும் அறிந்து கொள்கிற வாய்ப்பைப் பெற்றதாகவும் கூறினர்.
இந்தப் பயணமும் பயிற்சியும், வித்யா, அக்ஷரா, சுமித்குமார், பால்வண்ணன், சுகந்த், சந்துரு ஆகியோருடைய அடுத்தகட்ட உயர்கல்விக்கும் வேலைவாய்ப்புக்கும் அடித்தளமிட்டுள்ளதில் மகிழ்ச்சி. அவர்களின் எதிர்காலம் சிறக்க நான் முதல்வன் துணை நிற்கும் என்று துணை முதல்வர் உதயநிதி தெரிவித்துள்ளார்.