தஞ்சாவூர். டிச.8.
தஞ்சாவூரில் டாக்டர் அம்பேத்கர் நினைவு தினத்தினை முன்னிட்டு வல்லம் பேரூராட்சி ஆர்.எஸ். திருமண மண்டபத்தில் தூய்மைப் பணியாளர்களுடனான சமபந்தி விருந்து உயர்கல்வித்துறை அமைச்சர் முனைவர் கோவி. செழியன் மாவட்ட ஆட்சித்தலைவர் பா. பிரியங்கா பங்கஜம் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது திருவையாறு சட்டமன்ற உறுப்பினர் துரை. சந்திரசேகரன் தஞ்சாவூர் சட்டமன்ற உறுப்பினர் டி.கே.ஜி. நீலமேகம், பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அண்ணாதுரை, பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் என். அசோக்குமார், தஞ்சாவூர் மாநகராட்சி மேயர் சண். இராமநாதன், கும்பகோணம் மாநகராட்சி மேயர்.க.சரவணன் மாவட்ட ஊராட்சித் தலைவர் ஆர்.உஷா புண்ணியமூர்த்தி, பேரூராட்சிகள் உதவி இயக்குநர் மாஹீன் அபுபக்கர், வல்லம் பேரூராட்சி தலைவர் செல்வராணி கல்யாணசுந்தரம், துணைத்தலைவர் மகாலெட்சுமி வெங்கடேசன் செயல் அலுவலர் பா.இராஜசேகர் ஆகியோர் தூய்மை பணியாளர்களுடன் அமர்ந்து சமபந்தி விருந்தில் கலந்துக்கொண்டு உணவு
அருந்தினர்.



