கிருஷ்ணகிரி, அக். 23- தே.மு.தி.க., சார்பில், விஜயகாந்தின், 72வது பிறந்த நாள் விழா, கட்சியின் 20ம் ஆண்டு விழா, மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, என முப்பெரும் விழா, காவேரிப்பட்டணம் பேருந்து நிலையத்தில் நடந்தது. ஒன்றிய செயலாளர் விஜய்வல்லரசு வரவேற்றார். மாவட்ட பொறுப்பாளர் கே.ஆர்.சின்னராஜி தலைமை வகித்தார். மாவட்ட பொருளாளர் ஓம் சாந்தி சங்கர், மாநில மாணவரணி துணை செயலாளர் திருப்பதி, மாநில வர்த்தக அணி துணை செயலாளர் முருகேசன், ஒன்றிய அவைதலைவர் காளியப்பன், ஒன்றிய பொருளாளர் பி.சி.கணக்கன், துணைச் செயலாளர் முருகன், பொதுக்குழு உறுப்பினர்களான காதர், சிவகாமி பாலசுப்பிரமணி, மாவட்டத் துணைச் செயலாளர் வேடியப்பன், செயற்குழு உறுப்பினர் லட்சுமணன், செந்தில்குமார், வேலு ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில், கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா, பொதுமக்களுக்கு பசு கன்றுகள், மருந்து தெளிப்பான், சலவைப் பெட்டி, தையல் இயந்திரம் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரையாற்றினார். அப்போது அவர் தமிழகத்தில் போதை பொருள்கள் அதிக அளவில் இருப்பதாகவும் இதை திமுக அரசு கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருவதாகவும் தெரிவித்தார். இதனால் மாணவர் சமுதாயங்கள் பெரிதளவில் பாதிக்கப்பட்டு வருவதாகவும் வேதனை தெரிவித்தார். மேலும் இது தமிழ்நாடா? அல்லது போதை நாடா? என தெரியவில்லை என வினா எழுப்பினார். இந்த முப்பெரும் விழா கூட்டத்திற்கு, கழக அவைத்தலைவர் டாக்டர் இளங்கோவன், மாணவரணி துணை செயலாளர் பம்பல்ராஜ், விவசாய அணி துணை தலைவர் ராமலிங்கம், மேற்கு மாவட்ட செயலாளர் முருகேசன், தர்மபுரி மாவட்ட செயலாளர்கள் குமார், சங்கர், திருப்பத்தூர் ஹரிகிருஷ்ணன், கிழக்கு மாவட்ட ஒன்றிய செயலாளர்களான முருகன், வஜ்ரவேல், பர்கூர் கே.வி.கோவிந்தராஜ், எஸ்.ஆர்.பழனி, போச்சம்பள்ளி அப்பாபிள்ளை, மத்தூர் சந்திரசேகர், மத்தூர் விவேகானந்தன், ஊத்தங்கரை கதிர்வேல், ஊத்தங்கரை மாதேஸ்வரன், பேரூராட்சி செயலாளர்களான நாகார்ஜுனல்லி கோவிந்தராஜ், ஊத்தங்கரை துரை, காவேரிப்பட்டினம் ரமேஷ், மாவட்ட பிரதிநிதி புளியம்பட்டி திருநாவுக்கரசு, மற்றும் காவேரிப்பட்டணம் ஒன்றிய நிர்வாகிகளான பி.சி.குமார், அதிரடி பிரபு, சுந்தரேசன், பூங்கொடி, கிருஷ்ணன், காமராஜ், கணேசன், முருகன், சுந்தரம், உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் பொதுக்குழு உறுப்பினர் ரஞ்சித் குமார் நன்றி கூறினார்.



