போகலூர், மார்ச் 31-
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி சட்டமன்ற தொகுதியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்திற்கான நிதி ரூபாய் 4034 கோடி நிதியை வழங்காமல் வஞ்சிக்கும் மத்திய அரசு மற்றும் பிரதமர் மோடியை கண்டித்து திமுக சார்பில் பரமக்குடி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட போகலூர் மேற்கு ஒன்றியம் மஞ்சூரில் திமுக மாவட்ட பொருளாளர் சட்ட மன்ற உறுப்பினர் முருகேசன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் போகலூர் மேற்கு ஒன்றிய செயலாளர் குணசேகரன், ஒன்றிய துணைச் செயலாளர் கலைச்செல்வி, பொதுக் குழு உறுப்பினர் பூமிநாதன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் தங்கராஜ், கனகராஜ், சிவசுப்பிரமணியன், மாவட்ட பிரதிநிதி கார்த்திக் பாண்டி மாவட்ட பிரதிநிதி வழக்கறிஞர் துரைமுருகன், தகவல் தொழில்நுட்ப அணி சண்முக சுந்தரம் மற்றும் அருண்பாண்டியன் மற்றும் கழக நிர்வாகிகள் பொதுமக்கள் தொண்டர்கள் ஏராளமான கலந்து கொண்டனர்.