தேனி,பிப்.23-
பெரியகுளத்தில் திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம்எம்பி எம்எல்ஏ பங்கேற்பு.
தேனி மாவட்டம் பெரியகுளம் மோகன்தாஸ் திருமண மண்டபத்தில் பெரியகுளம் திமுக வடக்கு ஒன்றிய கழகம் சார்பில் பொது உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு வடக்கு ஒன்றிய செயலாளர் எல்.எம்.பாண்டியன் தலைமை வகித்தார். பெரியகுளம் எம்எல்ஏ கே.எஸ்.சரவணக்குமார், தேர்தல் தொகுதி பொறுப்பாளர் முத்துராமலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த கூட்டத்தில் தேனி பாராளுமன்ற உறுப்பினரும், தேனி வடக்கு மாவட்ட செயலாளருமான தங்க.தமிழ்ச்செல்வன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். மேலும் மும்மொழிக் கொள்கையை நிர்பந்தம் செய்யும் மத்திய அரசை கண்டித்தும், மத்திய அரசின் பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கு நிதி ஒதுக்காமல் தமிழ்நாட்டை வஞ்சிக்கும் மக்கள் விரோத போக்கை கண்டித்தும், இஸ்லாமியர்களுக்கு எதிரான வக்பு வாரிய சட்ட மசோதாவை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மத்திய அதிகாரத்தை கண்டித்தும் மற்றும் மார்ச் 01 ஆம் தேதி பிறந்த நாள் காணும் தமிழக முதலமைச்சரின் பிறந்தநாள் விழாவினை சிறப்பாக கொண்டாடுதல் உள்ளிட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இக்கூட்டத்தில் மாவட்ட அவைத்தலைவர் பி.டி.செல்லப்பாண்டியன், நகர செயலாளர் முகமது இலியாஸ், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் வழக்கறிஞர் எஸ்பிடி.ஸ்டீபன், முன்னாள் பெரியகுளம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் தங்கவேல், மாவட்ட பொறியாளர் அணி துணை அமைப்பாளர் ராம்ஜி உட்பட பலர் கலந்து கொண்டனர்.