காஞ்சிபுரம் ஏப்ரல் 21
காஞ்சிபுரம் மாவட்டம் மேற்கு ஒன்றியம் திம்மசமுத்திரம் ஊராட்சியை சேர்ந்த திமுக நிர்வாகி ஆர்.மேஷ் திமுக அரசின் நீட் தேர்வு குறித்து பொய் வாக்குறுதியால் உயிரிழப்புகள் ஏற்பட்டதாக கூறி அக்கட்சியிலிருந்து விலகி முன்னாள் தலைவர் ஏரிவாக்கம் ரமேஷ் ஏற்பாட்டில் காஞ்சிபுரம் மேற்கு ஒன்றிய செயலாளர் தும்பவனம் ஜீவானந்தம் தலைமையில் முன்னாள் அமைச்சர்கள் வைகைசெல்வன், வி.சோமசுந்தரம் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர். உடன் அமைப்பு செயலாளர்கள் வாலாஜாபாத் பா.கணேசன், மைதிலி திருநாவுக்கரசு, முன்னாள் எம்எல்ஏ பழனி,முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் காஞ்சி பன்னீர்செல்வம், மாவட்ட அவை தலைவர் குண்ணவாக்கம் கிருஷ்ணமூர்த்தி, மாவட்டத் துணைச் செயலாளர் போந்தூர் செந்தில்ராஜன், மற்றும் அதிமுக மாவட்ட இளைஞரணி செயலாளர் சிறுவாக்கம் ஆனந்தன், மாவட்ட மாணவரணி செயலாளர் திலக்குமார், ஒன்றிய அவைத்தலைவர் ஆதிசங்கர் உட்பட மற்றும் பலர் உடனிருந்தனர்.