திருச்சுழி, அக்டோபர் 15 –
விருதுநகர் மாவட்டம் சின்னப்பேராலி கிராமத்தில் காவை தென் இந்திய கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்கள் முன்னேற்ற நலச் சங்கத்தின் சார்பாக 100 நாள் வேலை பணியாளர்களிடம் புகையில்லா தீபாவளியை கொண்டாடும் விதமாக புகையினால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்பு பற்றியும், பாதிப்பை குறைப்பதற்கு மரங்கள் நடுவது பற்றிய விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டது.
நிகழ்ச்சியில் தொழிற்சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் முருகேசன் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். உடன் நரிக்குடி ஒன்றிய செயலாளர் கணேசன், சமூக ஆர்வலர் சின்னப் பொன்னு, சசிகலா மற்றும் கிராமத்து பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.



