சேலம்,ஜூன்.16
சேலம் மாவட்டம் அயோத்தியாபட்டிணம் மின்னாம்பள்ளி தனியார் திருமன மஹாலில் தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்க மாவட்ட செயற்குழு,பொதுக்குழு கூட்டம் தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்க மாவட்ட தலைவர் சிவசங்கர் தலைமையில் நடைபெற்றது. இதில் மாநில தலைவர் அ.ஜான்போஸ்கோ பிரகாஷ் விழா பேருரையாற்றினார்.
மாநில பொருளாளர் கே.மகேஸ்வரன்,மாநில பொதுச் செயலாளர் தூத்துக்குடி வி.வேல்முருகன்,தலைமை நிலைய செயலாளர் வந்தவாசி வி.சுரேஷ்,மாநில தலைவர் தருமபுரி கே.கிருஷ்ணன், நாமக்கல் மாவட்ட தலைவர் ஆர்.செந்தில்குமார்,மாநில அமைப்புச் செயலாளர் கிருஷ்ணகிரி டி.செங்கதிர் செல்வன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
இறுதியாக தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கம் அயோத்தியா பட்டிணம் ஒன்றிய தலைவர் வி.முருகன் நன்றியுரை ஆற்றினார்.தொடர்ந்து ஊராட்சி செயலாளர்களுக்கு வழங்கப்படும் ஊதியம் அரசு கருவூலம் மூலம் வழங்கிட கோருதல், ஊராட்சி செயலாளர்களுக்கு தேர்வு நிலை சிறப்பு நிலை, தேக்க நிலை ஊதியம் வழங்கிட கோருதல், ஊராட்சி செயலாளர்களை தமிழக அரசின் பென்சன் திட்டத்தில் சேர்க்க வேண்டும்,3 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஊராட்சி செயலாளர்களுக்கு கிராம அலுவலர்களுக்கு பணியிட மாறுதல் வழங்குவது போல் கவுன்சிலிங் முறையில் வட்டாரத்திற்குள் பணியிடமாறுதல் வழங்க கோருதல்,புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்ட நிர்வாகிகளுக்கு பொதுக்குழு வாயிலாக வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்ளுதல் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.