ராமநாதபுரம், ஜுலை 29-
ஆதித்தமிழர் பேரவை இராமநாதபுரம் மாவட்ட செயற்குழு கூட்டம் மேலச்சோத்தூரணி சமுதாயக்கூடத்தில் மாவட்ட செயலாளர் சிவா தலைமையில் மாநில ஊடக பிரிவு செயலாளர் அருண் அதியன் முன்னிலையில் நடைபெற்றது.
கூட்டத்தில்
சிறப்பு அழைப்பாளராக மாநில பொது செயலாளர் கபீர்நகர் கார்த்திக் பங்கேற்று பேரவையின் களப்பணியினை எடுத்துரைத்து விளக்கவுரையாற்றினார்.
முன்னாள் மாவட்ட செயலாளர் பூமிநாதன் மற்றும் முன்னாள் நிர்வாகிகள் சாகுல் ஹமீது , சந்திரன், முத்துப்பாண்டி, காந்திநகர் கணேசன் , பூமிநாதன், சுப்பிரமணி, பாலகணேசன், மூர்த்தி மற்றும் சக்கரக்கோட்டை மேலச்சோத்தூரணி காந்திநகர் அண்ணாநகர் இராமேஸ்வரம் பரமக்குடி சேர்ந்த நிர்வாகிகள் உறுப்பினர்கள் தொண்டர்கள் திரளாக பங்கேற்றனர். கூட்டத்தில்
ராமநாதபுரம் மாவட்டம் ஆதித்தமிழர் பேரவையின் மாவட்ட செயலாளராக சிவா நியமனம் செய்த நிறுவனர் தலைவர் அதியமான் அவர்களுக்கும் பொதுச் செயலாளர் கோவை ரவிக்குமார் உள்ளிட்ட மாநில நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவிப்பது, வருகின்ற ஆகஸ்ட் 20ஆம் தேதி மாமன்னர் ஒண்டிவீரன் வீர வணக்கம் நாளுக்கு பத்துக்கும் மேற்பட்ட வாகனங்களில் ராமநாதபுரத்தில் இருந்து கிளம்பி செல்வது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
ஆதித்தமிழர் ஊடக பிரிவு நிர்வாகி நன்றி கூறினார்.