எக்ஸைட் பேட்டரி நிறுவனத்தின் சார்பில் திண்டுக்கல் மாவட்ட எக்ஸைடு பேட்டரி விற்பனையாளர்கள் கூட்ட நிகழ்ச்சி திண்டுக்கல் ஹோட்டல் விவேரா கிராண்டில் நடைபெற்றது.இந்நிகழ்ச்சிக்கு திண்டுக்கல் மாவட்டத்தின் எக்சைட் பேட்டரியின் மொத்த விற்பனையாளர் பிரிமியர் பவர் கண்ட்ரோல்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் P. சந்திரசேகரன் தலைமை தாங்கினார்.
எக்சைடு நிறுவனத்தின் மண்டல தலைமை விற்பனை அதிகாரி S. சுரேஷ் RSM சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு நிறுவனத்தின் வளர்ச்சி, பேட்டரியின் புதிய மாடல்கள், வாடிக்கையாளர்களின் மகிழ்ச்சி, பேட்டரியின் வாரண்டி (paper less) குறித்து விளக்கமாக எடுத்துரைத்தார் . எக்ஸைடு பேட்டரி நிறுவனத்தின் சதாநிதி-ASM, ஆனந்த்-ASM, மகேந்திரன்ASE ரோசாரியோ பிரபு ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள்.இந்நிகழ்வில் திண்டுக்கல் எக்சைடு பேட்டரி விற்பனையாளர்கள் பலர் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.நிகழ்ச்சியின் முடிவில் பிரிமியர் பவர் கண்ட்ரோல்ஸ் மதுரை கிளை உரிமையாளர் N.சரவணகுமார் நன்றி கூறினார்.
எக்ஸைட் பேட்டரி நிறுவனத்தின் சார்பில் திண்டுக்கல் மாவட்ட எக்ஸைடு பேட்டரி விற்பனையாளர்கள் கூட்டம்.



