திண்டுக்கல், ஆகஸ்ட் 11 –
திண்டுக்கல் ஒருங்கிணைந்த மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் தமிழகத்தில் தொடர்ச்சியாக சாதிய வன்மத்தோடு நடைபெறும் ஆணவ கொலை தடுக்க வலியுறுத்தியும், தமிழக அரசு உடனடியாக ஆணவக் கொலை தடுப்பு தனி சட்டத்தை இயற்ற கோரியும் திண்டுக்கல் நாகல் நகர் ரவுண்டானா அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டம் ஆனது மாநகர மாவட்ட செயலாளர் க. மைதீன் பாவா தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. திண்டுக்கல் மைய மாவட்ட செயலாளர் ச. தமிழரசன், மேற்கு மாவட்ட செயலாளர் சு. திருவளவன் மற்றும் கிழக்கு மாவட்ட செயலாளர் தமிழ்முகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முதன்மை செயலாளர் ஏ.சி. பாவரசு கண்டன உரை ஆற்றினார்.
தொ.வி.மு மாநில துணைச் செயலாளர் திருச்சித்தன், மேலும் திண்டுக்கல் மாவட்ட மகளிர் அணி செயலாளர் சவரியம்மாள், மகளிரணி மாவட்ட துணைச் செயலாளர் இரா.ஜே. திவ்யா, வேடசந்தூர் மகளிர் அணி துணைச் செயலாளர் கவிதா குமாரி, நத்தம் மாவட்ட மகளிரணி சூசையம்மாள், மாநகர பொருளாளர் பால்ராஜ், தொ.வி.மு தொகுதி செயலாளர் ஹைதர் அலி, நகரச் செயலாளர் ஆனந்த்ராஜ், துணை ஒன்றிய செயலாளர் சுப்ரமணி உட்பட மாநகர, மாவட்ட, ஒன்றிய பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் பெரும் திரளாக கலந்து கொண்டு ஆணவக் கொலைகள் தடுப்பு சட்டத்தை உடனே இயற்றக் கோரி கோஷங்களை முழங்கினர். இதில் 150-க்கும் மேற்பட்ட மகளிர் அணி உறுப்பினர்களும் 500க்கும் மேற்பட்ட மாநகர மாவட்ட உறுப்பினர்களும் ஆணவக் கொலைக்கு எதிரான சட்டத்தை நிறுவக் கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பாக நடந்த ஆர்ப்பாட்டத்தில் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.



