மார்த்தாண்டம், செப். 8 –
மார்த்தாண்டம் மேம்பாலத்தில் ரோடை கடந்து செல்ல நின்ற ஆசிரியை மீது வாகனம் மோதியது. மார்த்தாண்டம் பாகோடு பேரை பகுதியை சேர்ந்தவர் உஷா நிர்மலா குமாரி (52) , அரசு பள்ளி ஆசிரியராக உள்ளார். இவர் சம்பவத்தன்று மாலை மார்த்தாண்டம் மேம்பால பகுதியில் ரோட்டை கடந்து செல்ல நின்றுள்ளார்.
அப்போது அதிவேகமாகவும் அஜாக்கிரதையாகவும் வந்த வாகனம் உஷா நிர்மலா குமாரியை இடித்து தள்ளி விட்டு சென்றது. இதனால் அவர் பலத்த காயம் அடைந்தார். அருகில் உள்ளவர்கள் மீட்டு மார்த்தாண்டத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதுகுறித்து கொடுத்த புகாரின் பேரில் மார்த்தாண்டம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


