மதுரை தெப்பக்குளம் தியாகராசர் கல்லூரியில் வைரவிழா அரங்கில் 25 ஆம் ஆண்டு கார்கில் தினம் அனுசரிப்பு நிகழ்ச்சி
இக்கல்லூரி முதல்வர் முனைவர் து.பாண்டியராஜா தலைமையில்
மேஜர் தாமோதரன் கமாண்டிங் அதிகாரி, மற்றும் நாட்டு நலப்பணி திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர் மு.பாண்டி முன்னிலையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் தமிழ்நாடு என்சிசி பட்டாலியன், மதுரை காமராசர் பல்கலைக்கழகம் நாட்டு நலப்பணி திட்டம் இணைந்து நடத்திய இந்த நிகழ்வில் லெப்டினன்ட் கர்னல் விக்டர் செல்லத்துரை சிறப்புரை ஆற்றினார்.
இந்த நிகழ்வின் போது
மேஜர் அருண் நாகேந்திரன் தியாகராசர் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் சரவணன் ஜோதி, மற்றும் முருகன் கோவிந்தராஜ் செல்வகுமார் அன்பரசி உட்பட
மதுரை கல்லூரி சரஸ்வதி நாராயணன் கல்லூரி, வக்ஃப் வாரிய கல்லூரி தமிழ் நாடு பாலிடெக்னிக் கல்லூரி யாதவர் கல்லூரி மற்றும் தேசிய மாணவர் படை நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் 250 க்கு மேற்பட்டோர் பங்கேற்றனர்.
முன்னதாக கார்கில் போரின் போது உயிர் நீத்த வீரர்களுக்கு வீர வணக்கம் செலுத்தப்பட்டது.