நல்லூர் : டிசம்பர் 3
நல்லூர் ஊராட்சிக்குட்பட்ட இளைய நயினார் குளம், தமிழ் நகர், தாணுமாலயன் புதூர் ஆகிய பகுதிகளில் மின்விளக்குகள் செயல்படவில்லை என்ற செய்தி டிசம்பர் 1ம் தேதி தினதமிழ் நாளிதழில் வெளியிடப்பட்டது. இந்தச் செய்தி எதிரொலியாக நல்லூர் ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து மின்விளக்குகள் சரி செய்யப்பட்டு சீரமைக்கப்பட்டது. செய்தி வெளியிட்ட தினதமிழ் நாளிதழுக்கும், நடவடிக்கை மேற்கொண்ட நல்லூர் ஊராட்சி நிர்வாகத்திற்கும் பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.


