கிருஷ்ணகிரி அக் 2: கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட பொறுப்பாளராக கே.ஆர்.சின்ராஜ் என்பவரை தேமுதிக பொதுச்செயலாளர் கடந்த வாரம் புதிதாக நியமித்தார். புதிதாக நியமிக்கப்பட்ட மாவட்ட பொறுப்பாளர் கே.ஆர்.சின்ராஜ்க்கு கிருஷ்ணகிரி காவேரிப்பட்டணம் ஒன்றியம், சுண்டேகுப்பம் ஊராட்சியை சேர்ந்த ஏராளமான தேமுதிகவினர் ஆளுயர மாலை அணிவித்து தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர். மாற்றுக் கட்சியில் இருந்து சேர்ந்த புதிய உறுப்பினர்களுக்கு மாவட்ட பொறுப்பாளர் சால்வை அணிவித்து வரவேற்றார். பின்னர் அவர்கள் அனைவரிடமும், அக்டோபர் 20ஆம் தேதி காவேரிப்பட்டினத்தில் நடைபெறவுள்ள, தேமுதிக முப்பெரும் விழா, மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவிற்கு வருகை தரும் கழக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளித்து காவேரிப்பட்டினம் பேருந்து நிலையத்தில் நடைபெறும் நிகழ்ச்சிக்கு, கழகத்தினர் தங்களது குடும்பங்களுடன் வந்து நிகழ்ச்சியை சிறப்பிக்க வேண்டும் என, அனைவரிடமும் வேண்டுகோள் விடுத்தார். இந்த நிகழ்ச்சியில் காவேரிப்பட்டணம் ஒன்றிய செயலாளர் விஜய் வல்லரசு, ஒன்றிய பொருளாளர் கனக்கன், ஒன்றிய துணை செயலாளர் அதிரடிபிரபு, மாவட்ட பிரதிநிதி கணேசன், ஒன்றிய இளைஞரணி செயலாளர் கோவிந்தராஜ், வார்டு உறுப்பினர்களான சபரி, சின்னையன், சக்தி, கத்தேரிமுருகன், ராஜா, திருப்பதி, மொட்டையன்கொட்டாய் ராஜா, ராமகிருஷ்ணன், முருகேசன், மாது, முனுசாமி, குமார், தலைமை பொதுக்குழு உறுப்பினர் காதர், IT WING கிருஷ்ணமூர்த்தி, மாரிசெட்டிஹள்ளி சிவக்குமார், சூர்யா, கௌதம், அருள், உள்ளிட்ட ஏராளமான தேமுதிக கலந்து கொண்டனர்.



