தருமபுரி மாவட்ட
நேரு யுவ கேந்திரா சார்பில் தருமபுரி ஒன்றிய அளவிலான விளையாட்டு போட்டியானது
தருமபுரி அதியமான் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைப்பெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஸ்ரீ அங்காளம்மன் பாராமெடிக்கல் கல்லூரியின் தாளாளர் சிலம்பரசன் தலைமை வகித்தார். இந்த நிகழ்ச்சிக்கு நேரு யு வவேகேந்திரா தேசிய இளைஞர் தொண்டர்பசுபதி வரவேற்புரை ஆற்றினார். இந்த நிகழ்ச்சியில் நேரு யுவ கேந்திராவின் கணக்கு மற்றும் திட்ட அலுவலர் அப்துல் காதர் நிகழ்ச்சியின் விளக்கவுரை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில்
ஸ்ரீ அங்காளம்மன் பாராமெடிக்கல் கல்லூரியின் முதல்வர் துரை, அதியமான் டிவியின் இயக்குநர் கபில்தேவ், தீயணைப்பு துறை அலுவலர்
ரமேஷ், குளோபல் கிரிடிகள் கேர் மருத்துவமனையின் சிறப்பு மருத்துவர்கள் நந்தகுமார், சரண், கக்கன் இளைஞர் நற்பணி சங்கத்தின் செயலாளர் கமலக்கண்ணன், துணைத்தலைவர் சிவா, பொருளாளர் நவின் ஆகியோர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தார்கள்.
இந்த நிகழ்ச்சியில் 15 முதல் 29 வயதிற்கு உட்பட்ட இளைஞர்களுக்கு கைப்பந்து குழு போட்டி, சிலம்பம் தனிநபர் போட்டி, 100 மீட்டர் ஓட்டப்பந்தயம் போன்ற போட்டிகளும் 15 முதல் 29 வயதிற்கு உட்பட்ட மகளிர்களுக்கு கயிற் இழுக்கும் குழு போட்டி, 100 மீட்டர் ஓட்டப்பந்தயம் தனிநபர் போட்டி, சிலம்பம் தனிநபர் போட்டி போன்ற போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசும் சான்றிதழ்களும் நேரு யுவ கேந்திரா சார்பில் சிறப்பு விருந்தினர்கள் மூலம் வழங்கப்பட்டது. பாரம்பரிய சிலம்பம் ஆசிரியர் பாவெல்ராஜ், முருகன் மற்றும் அதியமான் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் சாவலி ஆகியோர் இந்த போட்டிகளுக்கு நடுவராக கலந்து கொண்டு இந்த நிகழ்ச்சியை நடத்தினார்கள். இந்த நிகழ்ச்சிக்கன ஏற்பாடுகளை நேரு யுவ கேந்திராவின் தேசிய இளைஞர் தொண்டர் பசுபதி , சுகந்தி ஆகியோர் செய்திருந்தனர்.