திருப்பத்தூர்:மார்ச்:7, திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை தனியார் திருமண மண்டபத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டத்தின் கீழ் சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது.
இவ்விழாவில் மாவட்ட திட்ட அலுவலர் செந்தில்குமார் அனைவரையும் வரவேற்று பேசினார்.
சிறப்பு விருந்தினராக ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் , திமுக மாவட்ட கழக செயலாளர் க.தேவராஜ் கலந்துகொண்டார்.
விழாவில் கலந்து கொண்ட நூறு கர்ப்பிணி தாய்மார்களுக்கு சீர்வரிசை வழங்கப்பட்டது.
சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் க.தேவராஜ் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்து பேசுகையில்: தற்போது நடைபெற்று வரும் நல்லாட்சியில் பெண்களுக்கு என பல்வேறு நலத்திட்டங்களை அழித்து வருகிறது. மேலும் குடும்ப தலைவிக்கு மாதந்தோறும் மகளிர் உரிமைத்தொகை, இலவச பேருந்து பயணம், கர்ப்பிணி தாய்மார்களுக்கு பேறுகால விடுப்பு, நிதி உதவி என பல்வேறு திட்டங்களை தொடர்ச்சியாக செய்து வருகிறது என பேசினார்.
இவ்விழாவில் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் சத்தியா சதீஷ்குமார், ஜோலார்பேட்டை திமுக நகர கழக செயலாளர் அன்பழகன், மேற்கு ஒன்றிய செயலாளர் சதீஷ்குமார், ஜோலார்பேட்டை மத்திய ஒன்றிய செயலாளர் உமா கண்ணுரங்கம், கிழக்கு ஒன்றிய செயலாளர் கவிதா தண்டபாணி, மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் சிந்துஜா ஜெகன், வட்டார மருத்துவ அலுவலர் மீனாட்சி ஆகியோர் பங்கேற்று சிறப்பித்தனர்.
மேலும் விழாவில் கர்ப்பிணி தாய்மார்களுக்கு வளைகாப்பு மற்றும் சீர்வரிசை, இனிப்பு, ஐந்து வகையான உணவுகள் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியின் இறுதியில் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் (பொறுப்பு) மாலினி நன்றியுரை வழங்கினார். நிகழ்வில் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள், குழந்தைகள் நல பணியாளர்கள், அங்கன்வாடி ஊழியர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.