தேனி மாவட்டம் கம்பம் நகராட்சிக்கு உட்பட்ட 6வது வார்டு மந்தை அம்மன் கோவில் தெருவில் பல நாட்களாக கழிவுநீர் வடிகால் சுத்தம் செய்யாமல் கழிவுநீர் வடிகால் அடைப்பு ஏற்பட்டுள்ளது.இதன்படி அப்பகுதியில் வீடுகளில் சேகாரமாகும் குப்பைகளை கம்பம் நகராட்சிகளிலிருந்து துப்புரவு பணியாளர்கள் யாரும் வாங்க வருவதில்லை என்று ஒரு சில தெருக்களில் மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். அப்பகுதியில் கொசுக்கள் உற்பத்தியாகி பெயரறிய நோய் தொற்று ஏற்படும் வாய்ப்பு உள்ளதால் கம்பம் நகராட்சி நிர்வாகம் துரித நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அப்பகுதி குடியிருப்பு வாசிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.



