கீழக்கரை அக 06-
மக்கள் நல பாதுகாப்பு கழக செயலாளர் முகைதீன் இப்ராகீம் இராமநாதபுர மாவட்ட ஆட்சியர்,தமிழ்நாடு போக்குவரத்து துறை கும்பகோணம் கோட்ட மேலாளர் ஆகியோருக்கு அனுப்பி உள்ள மனுவில் கூறியிருப்பதாவது,
இராமநாதபுரத்தில் இருந்து கீழக்கரை வழியாக ஏர்வாடி,சிக்கல் மற்றும் இதர ஊர்களுக்கு கடந்த எட்டு ஆண்டுகளுக்கு முன்பு அதாவது இராமநாதபுரம் கீழக்கரை ரயில்வே மேம்பாலம் கட்டுமான பணி தொடங்குவதற்கு முன் அரசு பேருந்து கட்டணம் தற்போதைய கட்டணத்தை விட குறைவாக இருந்தது.(குறிப்பாக இராமநாதபுரம் முதல் கீழக்கரை வரை ரூபாய் 15/=பேருந்து கட்டணமாக இருந்தது.)
இராமநாதபுரம் கீழக்கரை மேம்பால பணி தொடங்கிய நிலையில் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் பட்டண காத்தானை சுற்றி 6 கிலோ மீட்டர் செல்ல வேண்டிய நிலையில் பேருந்து கட்டணத்தை ரூபாய் 5/=கூடுதலாக வசூல் செய்து வந்தனர்.
இந்த நிலையில் தற்போது மேம்பால பணிகள் நிறைவு பெற்று அனைத்து பேருந்துகளும் மேம்பாலம் வழியாக சென்று வருகிறது.
தற்போது தனியார் மற்றும் சில அரசு பேருந்துகள் ரூபாய் 5/=குறைவாக கட்டணத்தை வசூல் செய்து வரும் நிலையில் கும்பகோணம் கோட்டம் மற்றும் சில அரசு பேருந்துகள் கட்டணத்தை குறைக்க வில்லை.(குறிப்பாக இராமநாதபுரம் முதல் கீழக்கரை வரை ரூபாய் 20/= பேருந்து கட்டணமாக வசூல் செய்து வருகின்றார்கள்.)
எனவே! சமூகம் பொதுமக்கள் நலன் கருதி மேம்பாலம் வழியாக பேருந்துகள் செல்வதால் பழைய பேருந்து கட்டணத்தை தற்போது வசூல் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளும் படி மக்கள் நல பாதுகாப்பு கழகம் சார்பாக மனுவில் கூறியுள்ளார்.